செய்திகள் மலேசியா
பாசிர் கூடாங் மருத்துவமனையில் நவீன வசதிகள் இருந்தபோதிலும், 1,192 பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளது: ஓன் ஹபிஸ்
பாசிர் கூடாங்:
நவீன வசதிகளையும் பல்வேறு நிபுணத்துவத் துறைகளையும் கொண்ட பாசிர் கூடாங் மருத்துவமனை பணியாளர் பற்றாக்குறை காரணமாக இன்னும் முழுமையாகச் செயல்படவில்லை.
இம்மருத்துவமனைக்கு ஒதுக்கப்பட்ட மொத்த 2,271 பணியிடங்களில், 1,079 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன.
மேலும் 1,192 பணியிடங்கள் இன்னும் காலியாக உள்ளன என்று ஜொகூர் மந்திரி புசார் டத்தோ ஓன் ஹபிஸ் காசி தெரிவித்தார்.
மருத்துவ நிபுணர்கள், தாதியர்கள், பிற சுகாதாரப் பணியாளர்களுக்கான காலிப் பணியிடங்கள் உள்ளதாக அவர் விளக்கினார்.
ஜொகூர் மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்த மருத்துவமனையை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில், மனிதவளப் பற்றாக்குறைப் பிரச்சினைக்கு சுகாதார அமைச்சு உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டும்.
இம்மருத்துவமனை நவீன வசதிகள், பெரிய கொள்ளளவு மற்றும் பல்வேறு நிபுணத்துவத் துறைகளைக் கொண்டுள்ளது.
இருப்பினும், பணியாளர் பற்றாக்குறை காரணமாக, அந்த மருத்துவமனையால் இன்னும் முழுத் திறனில் இயங்க முடியவில்லை.
ஆக இப்பிரச்சினைக்கு விரைந்து தீர்வுக் காணப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 5:25 pm
மலாக்கா மாநில ஆளுநர் பிறந்தநாள்: கல்வி அமைச்சர் FADLINA SIDEKக்கிற்கு டத்தோஸ்ரீ பட்டம்
August 24, 2026, 5:03 pm
திரைப்படத் துறை சார்ந்தவர்களை ஃபினாஸ் அழைக்கிறது; குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்படும்: அஸ்மிர்
August 24, 2026, 4:56 pm
மஸ்ஜித் இந்தியா முஸ்லிம் சுங்கை சிப்புட் இளைஞர் பிரிவின் மெர்டேக்கா நடைபயணம்
August 24, 2026, 4:44 pm
மெர்டேக்கா சதுக்கத்தில் தேசிய தின உரையை பிரதமர் அன்வார் நிகழ்த்துகிறார்
August 24, 2026, 4:08 pm
பள்ளி விடுமுறை, தேசிய விடுமுறை நாட்களுக்காக கே.டி.எம் 8 உத்தாரா ரயில் சேவைகளை வழங்குகிறது
August 24, 2026, 4:03 pm
