நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உட்லண்ட்ஸில் 10 கிலோ போதைப்பொருளுடன் மலேசியர் கைது செய்யப்பட்டார்

சிங்கப்பூர்:

கடந்த  ஆகஸ்ட் 1 அன்று, 10 கிலோ போதைப்பொருளைக் கடத்த முயன்றதாக சந்தேகத்தின் பேரில், சிங்கப்பூரின் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் 22 வயதான மலேசியர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

சிங்கப்பூர் குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையத்தின் தகவல்படி, 

சந்தேக நபரின் கார் சோதனைச் சாவடியில் மேலதிக சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. 

அப்போது, ​​காரின் பின்புறத்தில் சந்தேகத்திற்கிடமான போதைப்பொருள் அடங்கிய இரண்டு கட்டிகள் கொண்ட ஒரு பெட்டியை அதிகாரிகள் கண்டெடுத்தனர்.

மேலும் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் பின்னர் காரில் மேலும் போதைப்பொருட்களைக் கண்டெடுத்தனர்.

இதில் 8.6 கிலோ கஞ்சா, 1.5 கிலோ மெத்தம்பெட்டமைன் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் தெரு மதிப்பு சுமார் 361,000 சிங்கப்பூர் டாலர் என்றும், ஒரு வாரத்தில் 2,132 பயனர்களால் அவை பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது என்றும் ஐ.சி.ஏ. கூறியது.

மேலும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அந்த நபருக்கு மரண தண்டனை விதிக்கப்படும். 

சிங்கப்பூரில் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் உள்ள போதைப்பொருட்களுக்கு கட்டாய மரண தண்டனை விதிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset