செய்திகள் மலேசியா
ஐந்து வாகனங்களின் கார் கண்ணாடிகளை உடைத்த கும்பலை போலிஸ் தேடுகிறது
பெட்டாலிங் ஜெயா:
பெட்டாலிங் ஜெயா, டேசா மெந்தாரியிலுள்ள கார் நிறுத்தும் இடத்தில் சுமார் ஐந்து வாகனங்களின் கார் கண்ணாடிகளை உடைத்ததாக சந்தேகிக்கப்படும் ஒரு கும்பலை போலிஸ் தேடி வருகிறது.
நேற்று மாலை 5 மணியளவில் இந்த சம்பவம் குறித்து புகார் ஒன்று பெறப்பட்டதாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல்துறை துணைத்தலைவர் கண்காணிப்பாளர் முஹம்மத் ஹுசின் சொலெஹுடின் சொல்கிஃப்ளி கூறினார்.
மூன்று மோட்டார் சைக்கிள்களில் வந்த அந்த கும்பல் அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்து அங்கிருந்து தப்பியோடினர் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது
இந்தச் சம்பவத்தில் ஐந்து வாகனங்கள் சேதமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது, ஆனால் எந்தவொரு பொருட்சேதமும் ஏற்படவில்லை.
சம்பந்தப்பட்ட கும்பலையும் அதன் சந்தேக நபர்களையும் கைது செய்யும் நடவடிக்கையிலும் போலிஸ் முனைப்பு காட்டி வருவதாக அவர் சொன்னார்.
குற்றவியல் சட்டம் செக்ஷன் 427இன் கீழ் இந்த சம்பவம் விசாரணை செய்யப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக பொதுமக்களுக்கு ஏதேனும் தகவல் இருந்தால் உடனடியாக விசாரணை அதிகாரியையோ அல்லது அருகிலுள்ள போலிஸ் நிலையத்திலோ தெரிவிக்கலாம் என்று அவர் சொன்னார்.
--மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 5:25 pm
மலாக்கா மாநில ஆளுநர் பிறந்தநாள்: கல்வி அமைச்சர் FADLINA SIDEKக்கிற்கு டத்தோஸ்ரீ பட்டம்
August 24, 2026, 5:03 pm
திரைப்படத் துறை சார்ந்தவர்களை ஃபினாஸ் அழைக்கிறது; குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்படும்: அஸ்மிர்
August 24, 2026, 4:56 pm
மஸ்ஜித் இந்தியா முஸ்லிம் சுங்கை சிப்புட் இளைஞர் பிரிவின் மெர்டேக்கா நடைபயணம்
August 24, 2026, 4:44 pm
மெர்டேக்கா சதுக்கத்தில் தேசிய தின உரையை பிரதமர் அன்வார் நிகழ்த்துகிறார்
August 24, 2026, 4:08 pm
பள்ளி விடுமுறை, தேசிய விடுமுறை நாட்களுக்காக கே.டி.எம் 8 உத்தாரா ரயில் சேவைகளை வழங்குகிறது
August 24, 2026, 4:03 pm
