செய்திகள் மலேசியா
நெகிரி செம்பிலான் மாநில மந்திரி பெசாராக டத்தோ இஸ்மாயில் லாசிம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சிரம்பன்:
நெகிரி செம்பிலான் மாநில மந்திரி பெசாராக டத்தோ இஸ்மாயில் லாசிம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இஸ்தானா பெசார் செரி மெனந்தியில், யாங் டிபெர்டுவான் பெசார் நெகிரி செம்பிலான், துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவிர் முன்னிலையில் இவரது பதவிப் பிரமாணம் நடந்தது.
ஜுவாசே (Juasseh) சட்டமன்றத் தொகுதியில் மீண்டும் போட்டியிட்ட இஸ்மாயில், முஹம்மது ஜூஹைமி முஹம்மது யூசோஃப் (பெர்சத்து), முஹம்மது ஐடில் அப்துல்லாஹ் (பி.எச்) ஆகியோரைத் தோற்கடித்து, 4,323 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
இவர் கோலா பிலா அம்னோ (UMNO) பிரிவுத் தலைவராகவும் உள்ளார்.
மேலும், 2018 முதல் ஆகஸ்ட் 2023 வரை ஜுவாசே தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.
ஜுவாசே தொகுதிக்கு அப்பால், நவம்பர் 1999 முதல் மே 2018 வரை செனாலிங் (Senaling) சட்டமன்றத் தொகுதியையும் இவர் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.
அத்துடன், ஆகஸ்ட் 2023 முதல் மீண்டும் அத்தொகுதியின் உறுப்பினராகவும் இருந்து வருகிறார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 2, 2026, 9:01 pm
நெகிரி செம்பிலானில் நாளை பொது விடுமுறை: மந்திரி புசார்
August 2, 2026, 12:08 pm
ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் 32ஆவது கல்வியாத்திரையில் மாணவர்கள் உட்பட 10,000 பேர் பங்கேற்றனர்
August 2, 2026, 10:48 am
