நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெர்சத்துவைச் சேர்ந்த 23 பேர், நம்பிக்கை கூட்டணியைச் சேர்ந்த ஒருவர் என நெகிரி தேர்தலில் 30 வேட்பாளர்கள் வைப்புத்தொகையை இழந்தனர்

சிரம்பான்:

நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில், மொத்த வாக்குகளில் குறைந்தபட்சம் எட்டில் ஒரு பங்கையாவது பெறத் தவறியதால், மொத்தம் 30 வேட்பாளர்கள் தங்களது வைப்புத்தொகையை இழந்தனர்.

சிக்காமத் தொகுதியின் தகவல் பிரிவுத் தலைவர் துன் ஃபைசல் இஸ்மாயில் அஜீஸ், லாபு தொகுதியின் நெகிரி செம்பிலான் பெர்சத்து தலைவர் ஹனிபா அபு பாக்கர் போன்ற தலைவர்கள் உட்பட, 24 பெர்சத்து வேட்பாளர்களில் 23 பேர் தங்களது வைப்புத்தொகையை இழந்தனர்.

பலோங் தொகுதியின் நம்பிக்கை கூட்டணி வேட்பாளர் ஜாஹின் ஜினல் அபிடின், கூட்டணியிலிருந்து தனது வைப்புத்தொகையை இழந்த ஒரே வேட்பாளர் ஆவார்.

தேசியக் கூட்டணி வேட்பாளர் முஸ்தபா நாகூர் 15,197 வாக்குகளைப் பெற்ற நிலையில், ஜாஹின் 1,495 வாக்குகளை மட்டுமே பெற்றார். 

இதனால், முன்னாள் மாநில அரசு செயற்குழு உறுப்பினர் 13,702 வாக்குகள் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றார்.

ஜெராம் படாங்கில் நடந்த 4 முனைப் போட்டியில், தனது வைப்புத்தொகையை இழக்காத ஒரே பெர்சத்து வேட்பாளர் பெர்சத்து பிரிவுத் தலைவர் ஆர். ஸ்ரீ சஞ்சீவன் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset