செய்திகள் மலேசியா
கல்வி விவகாரங்களில் இந்திய மாணவர்கள் ஏமாற்றம் காணக்கூடாது; இந்தியர்களுக்கு யார் தலைவர் என்று தெரியவில்லை: சுரேன் கந்தா
பத்துகேவ்ஸ்:
இந்தியர்களுக்கு யார் தலைவர் என்று தெரியவில்லை என்று ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் தலைமை இயக்குநர் சுரேன் கந்தா கூறினார்.
மலாய், சீன மக்களிடையே பிளவுகள் இருந்தாலும் இனம், மதம், மொழி என்றால் அனைவரும் ஒன்றாகி விடுவார்கள்.
ஆனால் இந்திய சமுகம் இதில் வேறுப்பட்டு காணப்படுகினர். சிறுக சிறுக பிரிந்த சமூகம் தற்போது மொத்தமாக பிளவுப்பட்டு கிடக்கிறது.
இதனால் இந்தியர்களுக்கு யார் தலைவர் என்று தெரியவில்லை. இந்நிலை மாற வேண்டும்.
இதன் அடிப்படையில் தான் இன்று நடைபெற்ற ஸ்ரீ முருகன் நிலையத்தின் கல்வியாத்திரையில் முருகப் பெருமான் தான் நமது தலைவர்.
அவரை முன்வைத்து கல்வி உட்பட அனைத்திலும் இந்திய சமுகம் சாதிக்க வேண்டும்.
குறிப்பாக இன்றைய மாணவர்கள் தான் நாளைய தலைவர்கள் என முடிவெடுத்துள்ளோம்.
இதையே இந்திய சமுகம் இனி பின்பற்றவுள்ளது என்று சுரேன் கந்தா கூறினார்.
ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் 32ஆவது கல்வி யாத்திரை இன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
கிட்டத்தட்ட 10,000 பேர் கல்விக்காக இன்று ஒரே இடத்தில் கூடியுள்ளனர்.
முருகப்பெருமானின் வேலை முன் நிறுத்தி இக்கல்வியாத்திரை நடைபெற்றது.
வேல் முன்னிலைப்படுத்தி யாத்திரை செய்தால் கல்வியில் சாதிப்பார்களா என்று கேலியாக பேசலாம்.
வேலுக்கு உள்ள சக்தி இதற்கு எல்லாம் பதில் சொல்லும்.
மேலும் கல்வி விவகாரங்களில் இந்திய மாணவர்கள் ஏமாற்றம் காணக்கூடாது.
அவர்களுக்கும் சம வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று சுரேன் கந்தா கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 2, 2026, 9:01 pm
நெகிரி செம்பிலானில் நாளை பொது விடுமுறை: மந்திரி புசார்
August 2, 2026, 12:08 pm
ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் 32ஆவது கல்வியாத்திரையில் மாணவர்கள் உட்பட 10,000 பேர் பங்கேற்றனர்
August 2, 2026, 11:55 am
நெகிரி செம்பிலான் மாநில மந்திரி பெசாராக டத்தோ இஸ்மாயில் லாசிம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
August 2, 2026, 10:48 am
