நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

இந்தியத் தலைநகரில் ஊரடங்கு தொடங்கியது: அரவிந்த் கெஜ்ரிவால்  அறிவிப்பு  

புதுடெல்லி: 

தலைநகர் டெல்லியில் வார இறுதி நாட்கள் ஊரடங்கு நேற்றிரவு 10 மணி  முதல் தொடங்கியது. இது திங்கள் கிழமை காலை 5 மணி வரை நீடிக்கும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

புதுடெல்லியில் அத்தியாவசியமற்ற செயல்பாடுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனாத் தொற்று கடந்த சில வாரங்களாக வேகமாக அதிகரித்துவருகிறது. கொரோனாத் தொற்றின்  உருமாற்றமான ஒமிக்ரான் வைரஸ் பரவலும் இருப்பதால் பொது மக்களிடையே பதற்றம் தோன்றியுள்ளது. 

புது டெல்லியில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக24,383 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Delhi Weekend Curfew Starts, Non-Essential Activities On Hold For 50+ Hours

டெல்லி முதல்வரான அரவிந்த் கேஜ்ரிவாலுக்கும்கொரோனாத் தொற்று ஏற்பட்டு இப்போதுதான் குணமானது. 

இந்நிலையில் டெல்லியில் கோவிட்-19 பரவுவதை கட்டுப்படுத்த டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் வார இறுதி நாட்களில் ஊரடங்கு உத்தரவை விதிக்க முடிவு செய்துள்ளது.

இதன்படி டெல்லியில் உள்ள அரசு அலுவலகங்கள் ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்ய வேண்டும், தனியார் அலுவலகங்கள் வார இறுதி நாட்களில் 50 சதவீத திறனில் அலுவலகத்தில் பணியாற்றினால் போதுமென்று அறிவிக்கப்பட்டது. 

COVID-19 lockdown in Delhi extended till May 31 - BusinessToday

வார இறுதி ஊரடங்கு உத்தரவின் போது அத்தியாவசியமற்ற எந்த செயல்பாடும் அனுமதிக்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டது.

பால், உணவுப் பொருட்கள், மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கான போக்குவரத்து மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. அதற்கும் இ பாஸ் வழங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset