செய்திகள் மலேசியா
16ஆவது நெகிரி செம்பிலான் மாநில தேர்தல்: இளம் வாக்காளர்கள் விரைந்து வந்து வாக்களிப்பீர்
சிரம்பான்:
நெகிரி செம்பிலான் மாநிலத்தில் மாலை வேளையில் மழை பொழியும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில் அம்மாநிலத்தில் உள்ள இளம் வாக்காளர்கள் விரைந்து வந்து தங்களின் ஜனநாயக கடமையை நிறைவேற்றுமாறு மலேசியத் தேர்தல் ஆணையத்தின் தலைவர் டத்தோஶ்ரீ ரம்லான் ஹருன் கேட்டுக்கொண்டார்.
கள நிலவரத்தைக் காணும் போது இளம் தலைமுறையினர் வாக்காளர்களை விட முதியவர்களே அதிகளவில் வந்து தங்களின் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.
காலை 11 மணி நிலவரப்படி 28.11 விழுக்காடு வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இதில் முதியவர்கள் கூட்டமே அதிகமாக வாக்குகள் செலுத்தி கொண்டு இருப்பதாக அவர் சொன்னார்.
ஆக, இளம் தலைமுறை வாக்காளர்கள் விரைந்து வந்து உங்களின் ஜனநாயக கடமையை மேற்கொள்ள தவற வேண்டாம் என்று அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
16ஆவது நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற தேர்தல் கள நிலவரங்களை நேரடியாக ஆய்வு செய்த பின் டத்தோஶ்ரீ ரம்லான் ஹருன் செய்தியாளர்களிடம் இவ்வாறு தெரிவித்தார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 5:25 pm
மலாக்கா மாநில ஆளுநர் பிறந்தநாள்: கல்வி அமைச்சர் FADLINA SIDEKக்கிற்கு டத்தோஸ்ரீ பட்டம்
August 24, 2026, 5:03 pm
திரைப்படத் துறை சார்ந்தவர்களை ஃபினாஸ் அழைக்கிறது; குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்படும்: அஸ்மிர்
August 24, 2026, 4:56 pm
மஸ்ஜித் இந்தியா முஸ்லிம் சுங்கை சிப்புட் இளைஞர் பிரிவின் மெர்டேக்கா நடைபயணம்
August 24, 2026, 4:44 pm
மெர்டேக்கா சதுக்கத்தில் தேசிய தின உரையை பிரதமர் அன்வார் நிகழ்த்துகிறார்
August 24, 2026, 4:08 pm
பள்ளி விடுமுறை, தேசிய விடுமுறை நாட்களுக்காக கே.டி.எம் 8 உத்தாரா ரயில் சேவைகளை வழங்குகிறது
August 24, 2026, 4:03 pm
