நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நெகிரி செம்பிலான் மாநில தேர்தலில் நண்பகல் 12 மணிவரை 37.29 விழுக்காட்டினர் வாக்களிப்பு

சிரம்பான்: 

16ஆவது நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற தேர்தலில் நண்பகல் 12 மணிவரை 37.29 விழுக்காட்டினர் தங்களின் வாக்குகளைச் செலுத்தியுள்ளனர். 

இந்த தகவலை மலேசியத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. 

37.29 விழுக்காட்டினர் அல்லது 3 லட்சத்து 20 ஆயிரத்து 627 பேர் இதுவரை தங்களின் ஜனநாயக கடமையை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

16ஆவது நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது 

காலை 8 மணி முதல் மாலை 6 மணிவரை நெகிரி செம்பிலான் மாநில மக்கள் தங்களின் வாக்குகளைச் செலுத்தி வருகின்றனர். 

இந்த தேர்தலில் 103 வேட்பாளர்கள் களம் கண்டுள்ளனர். மொத்தம் 36 சட்டமன்ற இடங்களுக்கும் இன்று தேர்தல் நடக்கிறது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset