நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ரோக்கி வளர்ப்பு நாய் கொல்லப்பட்ட சம்பவம்: போலிஸ் விசாரணையைத் தொடங்கியுள்ளது 

கிள்ளான்: 

ரோக்கி எனும் வளர்ப்பு நாய் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக போலிஸ் தரப்பு விசாரணையைத் தொடங்கியுள்ளனர். 

இந்த கொடூரமான செயல் கிள்ளான் தாமான் தெலுக் கெடுங் இண்டாவில் நிகழ்ந்தது 

இந்தச் சம்பவம் குறித்து குற்றவியல் சட்டம் பிரிவு 428-இன் கீழ் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

தென் கிள்ளான் மாவட்ட காவல்துறை தலைவர் லிம் ஜிட் ஹுய் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் தொடர்புடைய நபர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படலாம்.

சமூக வலைதளங்களில் இந்தச் சம்பவத்தின் காணொளிகளை பொதுமக்கள் பரப்ப வேண்டாம் என்று போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

அத்தகைய செயல்கள் பொதுமக்களிடையே தேவையற்ற பீதியையும் அமைதியின்மையையும் ஏற்படுத்தக்கூடும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

மலேசிய விலங்கு நலச்சங்கமான SAFM இந்தச் சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. 

இந்தச் சம்பவத்தின்போது கிள்ளான் அரச நகராட்சி மன்றத்தின் (MBDK) அதிகாரிகளும் நிகழ்விடத்தில் இருந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால், பாதுகாப்பு நடைமுறைகளின்படியே நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறியுள்ள MBDK, உரிமையாளர் ஆக்ரோஷமாக நடந்து கொண்டதாகவும் விளக்கம் அளித்துள்ளது.

மேலும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சாண்டியாகோவும் ரோக்கிக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset