செய்திகள் மலேசியா
நெகிரி செம்பிலான் மாநில தேர்தல்: 16ஆவது முறையாக வாக்களித்து முன்னாள் ராணுவ வீரர் சாதனை
சிரம்பான்:
1957ஆம் ஆண்டு நாடு சுதந்திரம் அடைந்தது முதல் இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் முன்னாள் ராணுவ வீரரான அயூப் முஹம்மத் தொடர்ந்து வாக்களித்து சாதனை படைத்துள்ளார்.
தனது 89-வது வயதிலும் சற்றும் குறையாத உற்சாகத்துடன் அவர் வாக்களிக்கும் மையத்திற்கு நேரில் வருகை தந்தார்.
இன்று காலை சரியாக 8.15 மணிக்கு சிரம்பான் அம்பாங்கானில் உள்ள டத்தோ கிளானா பெட்ரா மாமூர் இடைநிலைப் பள்ளி மையத்திற்கு அவர் வந்தடைந்தார்.
நாட்டின் மீது கொண்ட பற்று காரணமாக தனக்குள்ள வாக்களிக்கும் கடமையைச் செய்வதில் இன்றும் மகிழ்ச்சியடைவதாக அவர் தெரிவித்தார்.
மூத்த குடிமக்கள் எவ்வித சிரமமும் இன்றி வாக்களிக்கும் வகையில் தற்போதைய ஏற்பாடுகள் அமைந்துள்ளதாக அவர் பாராட்டினார்.
தான் வாக்களிக்கும் மையத்திற்கு வந்து செல்ல வெறும் 15 நிமிடங்கள் மட்டுமே ஆனதாக அவர் விளக்கினார்.
மக்களின் இன்னல்களைப் புரிந்து கொண்டு அவற்றை தீர்க்க பாடுபடும் தகுதியான பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க வாக்களிப்பு அவசியம் என்றார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 5:25 pm
மலாக்கா மாநில ஆளுநர் பிறந்தநாள்: கல்வி அமைச்சர் FADLINA SIDEKக்கிற்கு டத்தோஸ்ரீ பட்டம்
August 24, 2026, 5:03 pm
திரைப்படத் துறை சார்ந்தவர்களை ஃபினாஸ் அழைக்கிறது; குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்படும்: அஸ்மிர்
August 24, 2026, 4:56 pm
மஸ்ஜித் இந்தியா முஸ்லிம் சுங்கை சிப்புட் இளைஞர் பிரிவின் மெர்டேக்கா நடைபயணம்
August 24, 2026, 4:44 pm
மெர்டேக்கா சதுக்கத்தில் தேசிய தின உரையை பிரதமர் அன்வார் நிகழ்த்துகிறார்
August 24, 2026, 4:08 pm
பள்ளி விடுமுறை, தேசிய விடுமுறை நாட்களுக்காக கே.டி.எம் 8 உத்தாரா ரயில் சேவைகளை வழங்குகிறது
August 24, 2026, 4:03 pm
