செய்திகள் மலேசியா
மூத்த சமூக சேவகியும் நாட்டின் 'பாட்டிக்' (batik) கலைப் பாரம்பரியத்தை மேம்படுத்தியவருமான டத்தோ லீலா முஹம்மது அலி காலமானார்
கோலாலம்பூர்:
மூத்த சமூக சேவகியும் நாட்டின் 'பாட்டிக்' (batik) கலைப் பாரம்பரியத்தைப் பாதுகாத்து மேம்படுத்தியவருமான டத்தோ லீலா முஹம்மது அலி (Datuk Leela Mohd Ali), நேற்று காலை தனது 86-வது வயதில் காலமானார்.
சமூக நலன், சமூக மேம்பாட்டிற்கான அவரது பங்களிப்புகளுக்காகவும், மலேசியப் பாட்டிக் கலையைத் தேசிய பாரம்பரியமாகவும் அடையாளமாகவும் உயர்த்துவதற்கான அவரது முயற்சிகளுக்காகவும் அவர் அறியப்பட்டார்.
முன்னாள் சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான் ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லாஹ் (Tan Sri Dr. Noor Hisham Abdullah), அவரது மறைவுச் செய்தியைப் பகிர்ந்து கொண்டதுடன், இது நாட்டிற்கு ஒரு பேரிழப்பு என்றும் குறிப்பிட்டார்.
சமூகத்தின் மீதான அவரது அக்கறை, கருணை, பங்களிப்புகள் எப்போதும் நினைவுகூரப்படும் என்று அவர் கூறினார்.
"அவர் எங்களுடன் பகிர்ந்துகொண்ட ஆலோசனைகள், உண்மையான அக்கறை உள்ளிட்ட அர்த்தமுள்ள தருணங்களை நான் எப்போதும் போற்றுவேன்," என்று அவர் இன்று தனது ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்தார்.
லீலா, 'யாயாசான் புடி பென்யாயாங் மலேசியா' (Yayasan Budi Penyayang Malaysia - PENYAYANG) அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றினார்; மேலும், இதற்கு முன்பு மலேசியப் பாட்டிக் சங்கத்தின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.
மலேசியாவின் கலாச்சார பாரம்பரிய அடையாளத்தின் ஒரு பகுதியாகப் பாட்டிக் கலையை முன்னிறுத்துவதில் அவர் முக்கிய பங்காற்றினார்.
பினாங்கு, புக்கிட் கெலுகோர் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் உடற்கல்வி, வரலாற்றுத் துறையில் சிறப்புப் பயிற்சி பெற்ற அவர், கோலா கங்சாரில் உள்ள SMK Clifford பள்ளியில் ஆசிரியராகத் தனது பணியைத் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 5:25 pm
மலாக்கா மாநில ஆளுநர் பிறந்தநாள்: கல்வி அமைச்சர் FADLINA SIDEKக்கிற்கு டத்தோஸ்ரீ பட்டம்
August 24, 2026, 5:03 pm
திரைப்படத் துறை சார்ந்தவர்களை ஃபினாஸ் அழைக்கிறது; குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்படும்: அஸ்மிர்
August 24, 2026, 4:56 pm
மஸ்ஜித் இந்தியா முஸ்லிம் சுங்கை சிப்புட் இளைஞர் பிரிவின் மெர்டேக்கா நடைபயணம்
August 24, 2026, 4:44 pm
மெர்டேக்கா சதுக்கத்தில் தேசிய தின உரையை பிரதமர் அன்வார் நிகழ்த்துகிறார்
August 24, 2026, 4:08 pm
பள்ளி விடுமுறை, தேசிய விடுமுறை நாட்களுக்காக கே.டி.எம் 8 உத்தாரா ரயில் சேவைகளை வழங்குகிறது
August 24, 2026, 4:03 pm
