செய்திகள் மலேசியா
உலு சிலாங்கூரில் உள்ள ஒரு தமிழ்ப்பள்ளி ஆசிரியை பள்ளியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்
உலு சிலாங்கூர்:
உலு சிலாங்கூரில் உள்ள தமிழ்ப் பள்ளியொன்றில் பெண் ஆசிரியை ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த பள்ளி ஆசிரியை ஆசிரியர்கள் அறையில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
இந்த தகவலை உலு சிலாங்கூர் மாவட்ட போலிஸ் தலைவர் மணிமாறன் முனியாண்டி உறுதிப்படுத்தினார்.
நேற்று காலை 7.15 மணிக்கு அவசர அழைப்பு ஒன்று பெறப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், பாதிக்கப்பட்டவர் சுயநினைவின்றி இருந்ததைக் கண்டனர்.
"பின்னர் பாதிக்கப்பட்டவர் சிகிச்சைக்காக கோலா குபு பாரு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால் அங்கு அவர் இறந்துவிட்டதாக உறுதிசெய்யப்பட்டது," என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
இந்த வழக்கு தொடர்பாக தகவல் தெரிந்த பொதுமக்கள், அருகிலுள்ள எந்தவொரு காவல் நிலையத்தையோ, அல்லது உலு சிலாங்கூர் போலிஸ் தலைமையகத்தை 03-60641222 என்ற எண்ணிலோ, அல்லது விசாரணை அதிகாரி ஹலீம் கான் ஹசம் கானை 03-60481222 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளுமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 5:25 pm
மலாக்கா மாநில ஆளுநர் பிறந்தநாள்: கல்வி அமைச்சர் FADLINA SIDEKக்கிற்கு டத்தோஸ்ரீ பட்டம்
August 24, 2026, 5:03 pm
திரைப்படத் துறை சார்ந்தவர்களை ஃபினாஸ் அழைக்கிறது; குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்படும்: அஸ்மிர்
August 24, 2026, 4:56 pm
மஸ்ஜித் இந்தியா முஸ்லிம் சுங்கை சிப்புட் இளைஞர் பிரிவின் மெர்டேக்கா நடைபயணம்
August 24, 2026, 4:44 pm
மெர்டேக்கா சதுக்கத்தில் தேசிய தின உரையை பிரதமர் அன்வார் நிகழ்த்துகிறார்
August 24, 2026, 4:08 pm
பள்ளி விடுமுறை, தேசிய விடுமுறை நாட்களுக்காக கே.டி.எம் 8 உத்தாரா ரயில் சேவைகளை வழங்குகிறது
August 24, 2026, 4:03 pm
