செய்திகள் மலேசியா
சந்தேகத்திற்கிடமான விநியோக உத்தரவுகள் அல்லது போலி அரசு ஆவணங்களில் தங்களுக்கு எந்தவிதத் தொடர்பும் இல்லை: கால்நடைச் சேவைகள் துறை (DVS) அறிவிப்பு
புத்ராஜெயா:
சந்தேகத்திற்கிடமான விநியோக உத்தரவுகள் அல்லது போலி அரசு ஆவணங்களில் தங்களுக்கு எந்தவிதத் தொடர்பும் இல்லை என்பதை கால்நடைச் சேவைகள் துறை (DVS) திட்டவட்டமாக மறுத்துள்ளது.
நேற்றிரவு வெளியிட்ட அறிக்கையில், இத்தகைய பொறுப்பற்ற செயல், அத்துறையின் விவசாயம், உணவுப் பாதுகாப்பு அமைச்சகத்தின் நற்பெயரையும் நம்பகத்தன்மையையும் களங்கப்படுத்தும் நோக்கத்துடன் செய்யப்படும் ஒரு தீவிரமான குற்றம் என்று DVS கூறியது.
"துறையின் திட்டங்களுக்காகப் பொருட்களையும் சேவைகளையும் வழங்குமாறு விநியோகஸ்தர்களை ஏமாற்றுவதற்காக, DVS அதிகாரிகள் அவர்களின் பதவிகளைத் தவறாகப் பயன்படுத்துதல், போலி அரசு உத்தரவு ஆவணங்களைப் பயன்படுத்துதல் போன்ற மோசடி முயற்சிகள் தொடர்பான புகார்களை DVS தீவிரமாகக் கருதுகிறது," என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
எனவே, DVS தொடர்பான அனைத்து அதிகாரப்பூர்வ கொள்முதல் நடவடிக்கைகளும் 'மின்-கொள்முதல்' (e-Procurement) அமைப்பின் மூலமே மேற்கொள்ளப்படுவதை உறுதிசெய்யுமாறும், அந்த அமைப்பிற்கு வெளியே முன்வைக்கப்படும் சலுகைகள் அல்லது கோரிக்கைகள் குறித்து எப்போதும் எச்சரிக்கையாக இருக்குமாறும் அனைத்து விநியோகஸ்தர்களுக்கும் DVS அறிவுறுத்துகிறது.
"தொலைபேசி அழைப்புகள், வாட்ஸ்அப் (WhatsApp), அதிகாரப்பூர்வமற்ற மின்னஞ்சல்கள் அல்லது சரிபார்க்கப்படாத ஆவணங்கள் மூலம் பெறப்படும் அறிவுறுத்தல்கள் குறித்தும் விநியோகஸ்தர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்," என்று DVS தெரிவித்துள்ளது.
பெறப்பட்ட கொள்முதல் ஆவணங்கள் குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால், புத்ராஜெயாவில் உள்ள DVS தலைமையகத்தை 03-8870 2000 என்ற எண்ணிலோ அல்லது pro@dvs.gov.my என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவோ நேரடியாகத் தொடர்புகொள்ளுமாறும் DVS விநியோகஸ்தர்களுக்கு அறிவுறுத்துகிறது.
பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், விநியோகஸ்தர்களின் நலன்களைப் பாதுகாக்கவும், அத் துறையின் பெயர், அடையாளத்தைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கவும் இந்த நினைவூட்டலைப் பரப்ப அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்பையும் DVS வரவேற்பதாக அந்த அறிக்கை கூறுகிறது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 5:25 pm
மலாக்கா மாநில ஆளுநர் பிறந்தநாள்: கல்வி அமைச்சர் FADLINA SIDEKக்கிற்கு டத்தோஸ்ரீ பட்டம்
August 24, 2026, 5:03 pm
திரைப்படத் துறை சார்ந்தவர்களை ஃபினாஸ் அழைக்கிறது; குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்படும்: அஸ்மிர்
August 24, 2026, 4:56 pm
மஸ்ஜித் இந்தியா முஸ்லிம் சுங்கை சிப்புட் இளைஞர் பிரிவின் மெர்டேக்கா நடைபயணம்
August 24, 2026, 4:44 pm
மெர்டேக்கா சதுக்கத்தில் தேசிய தின உரையை பிரதமர் அன்வார் நிகழ்த்துகிறார்
August 24, 2026, 4:08 pm
பள்ளி விடுமுறை, தேசிய விடுமுறை நாட்களுக்காக கே.டி.எம் 8 உத்தாரா ரயில் சேவைகளை வழங்குகிறது
August 24, 2026, 4:03 pm
