நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சுங்கை பாரி அடுக்குமாடி இடிப்பு பணிகள் விரைவில் தொடங்கும்: டத்தோ சிவநேசன் தகவல்

ஈப்போ:

சுங்கை பாரி பழைய15 அடுக்குமாடி குடியிருப்பை இடிக்கும் பணிகள் சட்ட ரீதியான சிக்கல்கள் காரணமாக தாமதமான நிலையில், அவை தற்போது தீர்க்கப்பட்டுள்ளதால் பணிகள் விரைவில் தொடங்கும் என்று பேரா மாநில சுகாதாரம், மனிதவள மேம்பாடு, தேசிய ஒற்றுமை, இந்தியர் நலன் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ அ. சிவநேசன் தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக ஈப்போ மாநகர் மன்றத்திற்கும் மந்திரி பெசாருக்கும் பல்வேறு தரப்பினரால் கடிதங்கள் வழங்கப்பட்டிருந்தாலும், இந்தக் கட்டிடத்தின் நிலைமை மற்றும் திட்டம் குறித்து அரசுக்கு ஏற்கனவே முழுமையான தகவல்கள் உள்ளதாக அவர் கூறினார்.

இந்தக் கட்டிடத்தை மறுவளர்ச்சி செய்ய தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், பாரம்பரிய மதிப்புள்ள இரண்டு கட்டிட பகுதிகளைத் தவிர மற்ற பகுதிகள் அகற்றப்பட்டு புதிய மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

கட்டிடத்தை இடிக்கும் பணிகள் தாமதமானதற்கு சட்டச் சிக்கல்களே காரணம் அரசின் அலட்சியம் அல்ல என்றும் குறிப்பிட்டார்.

இன்னும் ஈப்போவில் உள்ள பிரபர உணவகம் ஒன்றில் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஈப்போ கல்லுமலை ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலய வளாகத்தில் நடைபெற்ற தேசிய திருமுருகன் மாநாட்டு சிறப்பு பணி குழுவினர்களுக்கு நற்சான்றிழ் வழங்கும் நிகழ்விற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

அந்த அடுக்குடிமாடி குடியிருப்பில் இரு மாணவிகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஆழ்ந்த இரங்களைத் தெரிவித்த அவர், சம்பவத்தின் உண்மை நிலை குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், அதன் முடிவுக்காக காத்திருக்க வேண்டும் என்றும் கூறினார்.

மேலும் , அந்த குடியிருப்பை இடிக்க தங்களுக்கு சம்பந்தப்பட்ட இலாகா வழங்கவேண்டும் என்று பேரா இந்திய வணிகர்கள் சங்கம் கோரிக்கை முன் வைத்திருந்தது.

அதற்கு பதில் அளித்த சிவநேசன்,

15 மாடி சுங்கை பாரி அடுக்குமாடி கட்டிடம், மறுசீரமைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக இடிக்கப்படவுள்ளதாக பேராக் வீடமைப்பு, சொத்துடைமை வாரியம் அறிவித்துள்ளது.

பேராக் வீடமைப்பு, சொத்துடைமை வாரியத்தின் தலைமைச் செயல் முறை அதிகாரி சைதீனா வான் நாசிர் , அந்த நிலப்பகுதியை மறுசீரமைக்கும் பணிக்காக ஒரு மேம்பாட்டாளர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அந்த நிலம் வாரியத்திற்க்கு சொந்தமானது. தற்போது தயாரிக்கப்பட்டுள்ள திட்டத்தின்படி, அங்கு உள்ள இரண்டு பாரம்பரிய கட்டிடங்கள் மட்டும் பாதுகாக்கப்படும். 

மீதமுள்ள அனைத்து கட்டிடங்களும், 15 மாடி அடுக்குமாடி கட்டிடத்தையும் சேர்த்து இடிக்கப்பட்டு, புதிய கட்டிடங்கள் அமைக்கப்படும் என்றார்.

திட்டமிட்டபடி அந்த கட்டடிடம் இடிப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகள் விரைவில் ஆரம்பமாகும் என்ற உத்தரவாதத்தை தாம் வழங்குவதாக டத்தோ அ. சிவநேசன் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset