செய்திகள் மலேசியா
நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலின் போது வானிலை தெளிவாக இருக்கும்: மலேசிய வானிலை ஆய்வு மையம்
சிரம்பான்:
வரும் சனிக்கிழமை நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலின் போது காலை வேளையில் ஏழு வாக்களிப்பு மையங்கள் இருக்கும் பகுதியில் வானிலை தெளிவாக இருக்கும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் மெட் மலேசியா கணித்துள்ளது.
சிரம்பான், ஜெலுபு, ஜெம்போல், தம்பின், கோலா பிலா மற்றும் ரெம்பாவ் உட்பட ஆறு பகுதிகளில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
போர்ட்டிக்சனில் நாள் முழுவதும் வானிலை தெளிவாகவும் வெயிலுடனும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாக்களிப்பு நாள் முழுவதும் சம்பந்தப்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் சராசரி வெப்பநிலை 23 முதல் 33 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
தங்களது வாக்களிப்பு செயல்முறை சுமூகமாகவும் பாதுகாப்பாகவும் செல்வதை உறுதி செய்வதற்காக வானிலை நிலவரங்களை வாக்களர்கள் அறிந்திருக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது.
விரைவான, துல்லியமான மற்றும் உண்மையான அண்மைய வானிலை தகவலைப் பெற, METMalaysia அதிகாரப்பூர்வ சமூக ஊடகத்தைத் தொடர்ந்து பின்பற்றுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 5:25 pm
மலாக்கா மாநில ஆளுநர் பிறந்தநாள்: கல்வி அமைச்சர் FADLINA SIDEKக்கிற்கு டத்தோஸ்ரீ பட்டம்
August 24, 2026, 5:03 pm
திரைப்படத் துறை சார்ந்தவர்களை ஃபினாஸ் அழைக்கிறது; குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்படும்: அஸ்மிர்
August 24, 2026, 4:56 pm
மஸ்ஜித் இந்தியா முஸ்லிம் சுங்கை சிப்புட் இளைஞர் பிரிவின் மெர்டேக்கா நடைபயணம்
August 24, 2026, 4:44 pm
மெர்டேக்கா சதுக்கத்தில் தேசிய தின உரையை பிரதமர் அன்வார் நிகழ்த்துகிறார்
August 24, 2026, 4:08 pm
பள்ளி விடுமுறை, தேசிய விடுமுறை நாட்களுக்காக கே.டி.எம் 8 உத்தாரா ரயில் சேவைகளை வழங்குகிறது
August 24, 2026, 4:03 pm
