நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இஸ்லாத்தை அவமதித்த பகுதிநேர தொழிலாளிக்கு எதிராக 12 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதிப்பு 

கோலாலம்பூர்: 

இஸ்லாத்தை அவமதிக்கும் வகையில் ஆபாசமான தகவலை அனுப்பிய குற்றச்சாட்டில் படைப்பாற்றல் துறையில் பகுதிநேர தொழிலாளி ஒருவருக்கு இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றம் 12 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. 

குற்றஞ்சாட்டப்பட்ட 48 வயதான இயோ லி யின் தனக்கு எதிரான குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் அவருக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டது. 

நீதிமன்றம் விதித்த அபராத தொகையைச் செலுத்த தவறினால் குற்றஞ்சாட்டப்பட்டவர் 10 மாதங்கள் சிறை தண்டனையைக் கழிக்க வேண்டும் என்று நீதிபதி முஹம்மத் இல்மமி அஹ்மத் உத்தரவிட்டார். 

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன், தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் மற்றவர்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்ததாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. 

அவர் புரிந்த இந்த குற்றத்தை புக்கிட் அமான் வர்த்தக குற்றத்தடுப்பு பிரிவு அலுவலகம் 2023, ஜூன் 22ஆம் தேதி கண்டறிந்தனர். 

இந்த வழக்கு விசாரணை 1998 தொடர்பு பல்லூடக சட்டத்தின் செக்‌ஷன் 233(1)(a) இன் கீழ் விசாரணை செய்யப்பட்டது. 

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக RM50,000 அபராதம் அல்லது ஓராண்டுக்கு மிகாத சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

மேலும், தண்டனைக்குப் பிறகு குற்றம் தொடரும் ஒவ்வொரு நாளுக்கும் RM1,000 அபராதம் விதிக்கப்படும்

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset