செய்திகள் மலேசியா
நீலாய் தொகுதி மக்கள் மாற்றத்தை விரும்புவது பெர்சத்து கட்சிக்கு சாதகமாக இருக்கும்: டத்தோ சரவணக்குமார்
நீலாய்:
நீலாய் சட்டமன்றத் தொகுதி மக்கள் மாற்றத்தை விரும்புவது பெர்சத்து கட்சிக்கு சாதகமாக இருக்கும்.
நீலாய் சட்டமன்றத் தொகுதி பெர்சத்து வேட்பாளர் டத்தோ வீ. சரவணக்குமார் இதனை கூறினார்.
நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத் தேர்தல் வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இத்தேர்தலில் நீலாய் சட்டமன்றத் தொகுதியில் பெர்சத்து சார்பில் நான் போட்டியிடுகிறேன். எண் 4 எனது வேட்பாளர் எண்ணாகும்.
இத்தேர்தலை முன்னிட்டு இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளேன். தொகுதியில் உள்ள பெரும்பாலான மக்களை சந்தித்து வாக்குகளை சேகரித்துள்ளேன்.
குறிப்பாக நீலாய் தொகுதியில் உள்ள மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். தங்களுக்கான புதிய பிரதிநிதி வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இது மக்களை சந்தித்து பேசும் போது நான் தெரிந்துக் கொண்டேன்.
ஆக மக்களின் இந்த எதிர்பார்ப்பு பெர்சத்து கட்சிக்கு சாதகமாக இருக்கும் என நான் நம்புகிறேன். இருந்தாலும் வாக்குகளை சேகரிக்க நாளை வரை முயற்சிகளை மேற்கொள்வேன்.
மேலும் இத்தொகுதியில் வெற்றி பெற கடைசி வரை போராடுவேன் என்று டத்தோ சரவணக்குமார் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 5:25 pm
மலாக்கா மாநில ஆளுநர் பிறந்தநாள்: கல்வி அமைச்சர் FADLINA SIDEKக்கிற்கு டத்தோஸ்ரீ பட்டம்
August 24, 2026, 5:03 pm
திரைப்படத் துறை சார்ந்தவர்களை ஃபினாஸ் அழைக்கிறது; குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்படும்: அஸ்மிர்
August 24, 2026, 4:56 pm
மஸ்ஜித் இந்தியா முஸ்லிம் சுங்கை சிப்புட் இளைஞர் பிரிவின் மெர்டேக்கா நடைபயணம்
August 24, 2026, 4:44 pm
மெர்டேக்கா சதுக்கத்தில் தேசிய தின உரையை பிரதமர் அன்வார் நிகழ்த்துகிறார்
August 24, 2026, 4:08 pm
பள்ளி விடுமுறை, தேசிய விடுமுறை நாட்களுக்காக கே.டி.எம் 8 உத்தாரா ரயில் சேவைகளை வழங்குகிறது
August 24, 2026, 4:03 pm
