செய்திகள் மலேசியா
பிரதமர் அன்வாரின் பணிவும் மன்னிப்பு கோரும் மனப்பான்மையும் போற்றுதலுக்குரியது: டாக்டர் குணராஜ்
சிரம்பான்:
ஆலய விவகாரம் தொடர்பாக இந்திய சமூகத்தின் உணர்வுகள் பாதிக்கப்பட்டிருந்தால் தயக்கமின்றி மன்னிப்பு கோரிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் பணிவும், பொறுப்புணர்வும் போற்றுதலுக்கும் பாராட்டுக்கும் உரியது.
செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு நாட்டின் பிரதமராக இருந்தாலும், தனது கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கலாம் என்பதை ஏற்று, மக்களின் உணர்வுகளை மதித்து மன்னிப்பு கோருவது உண்மையான தலைமைத்துவத்தின் அடையாளம்.
இந்திய சமூகத்தின் ஆதரவு எனக்கு மிகவும் முக்கியமானது. அவர்களின் உணர்வுகளைப் புண்படுத்தியிருந்தால் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என்ற பிரதமரின் கருத்து, இந்திய சமூகத்தின் மீது அவர் கொண்டுள்ள மரியாதையையும் அக்கறையையும் வெளிப்படுத்துவதாக டாக்டர் குணராஜ் தெரிவித்தார்.
மேலும், மடானி அரசாங்கம் பதவியேற்ற பிறகு ஒரு இந்து ஆலயம் கூட இடிக்கப்படவில்லை என்ற பிரதமரின் கூற்றும் உண்மை நிலையை பிரதிபலிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
ஆலய விவகாரங்கள் மிகவும் உணர்வுபூர்வமானவை என்பதால், அவற்றை அரசியல் லாபத்திற்காக பயன்படுத்தாமல், பரஸ்பர புரிந்துணர்வுடனும் உரையாடலின் மூலமும் அணுக வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
"தவறு ஏற்பட்டிருக்கலாம் என்று உணர்ந்தவுடன் மக்களிடம் நேரடியாக மன்னிப்பு கேட்கும் தைரியம் அனைவரிடமும் இருப்பதில்லை. பிரதமர் அன்வார் இப்ராஹிம் அதனை வெளிப்படுத்தியிருப்பது அவரது முதிர்ந்த அரசியல் பண்பையும் மனிதநேயத்தையும் காட்டுகிறது. இதனை நான் மனதார வரவேற்று பாராட்டுகிறேன்," என்று டாக்டர் குணராஜ் கூறினார்.
இந்திய சமூகத்தின் உரிமைகள், மத சுதந்திரம் மற்றும் சமய நல்லிணக்கத்தைப் பாதுகாக்கும் முயற்சிகளில் மடானி அரசாங்கம் தொடர்ந்து உறுதியுடன் செயல்படும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 5:25 pm
மலாக்கா மாநில ஆளுநர் பிறந்தநாள்: கல்வி அமைச்சர் FADLINA SIDEKக்கிற்கு டத்தோஸ்ரீ பட்டம்
August 24, 2026, 5:03 pm
திரைப்படத் துறை சார்ந்தவர்களை ஃபினாஸ் அழைக்கிறது; குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்படும்: அஸ்மிர்
August 24, 2026, 4:56 pm
மஸ்ஜித் இந்தியா முஸ்லிம் சுங்கை சிப்புட் இளைஞர் பிரிவின் மெர்டேக்கா நடைபயணம்
August 24, 2026, 4:44 pm
மெர்டேக்கா சதுக்கத்தில் தேசிய தின உரையை பிரதமர் அன்வார் நிகழ்த்துகிறார்
August 24, 2026, 4:08 pm
பள்ளி விடுமுறை, தேசிய விடுமுறை நாட்களுக்காக கே.டி.எம் 8 உத்தாரா ரயில் சேவைகளை வழங்குகிறது
August 24, 2026, 4:03 pm
