செய்திகள் மலேசியா
நெகிரியில் முன்னேற்றப் பாதை தொடர நம்பிக்கை கூட்டணிக்கு வாக்களியுங்கள்: கோபிந்த் சிங்
சிரம்பான்:
நெகிரி செம்பிலானின் வளர்ச்சிப் பயணம் சரியான திசையில் தொடர்வதை நாம் உறுதி செய்ய வேண்டும். வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி நடைபெறும் வாக்களிப்பு தினத்தில் நெகிரி செம்பிலான் மாநில மக்கள் பக்கத்தான் ஹராப்பானுக்கு வாக்களிக்கும்படி ஜசெக தலைவர் கோபிந்த் சிங் டியோ கேட்டுக் கொண்டார்.
ஒற்றுமை அரசாங்கம் எப்போதும் சாதனைமிக்க நிர்வாகம், அரசியல் நிலைத்தன்மை மற்றும் தூய்மையான நல்லாட்சியை அடிப்படையாகக் கொண்டு மக்களின் நலனை முன்னிறுத்தி செயல்பட்டு வருகிறது.
அரசின் ஒவ்வொரு கொள்கையும் மக்களின் அடிமட்டம் வரை சென்றடைய, நிலையான நிர்வாகமும், மாநில மற்றும் மத்திய அரசுகளுக்கிடையேயான நெருக்கமான ஒத்துழைப்பும், வெளிப்படையான தலைமைத்துவமும் அவசியம்.
இதன் மூலம் பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்தி, நமது இளைஞர்களுக்கு தரமான வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும்.
நெகிரி செம்பிலானின் முன்னேற்றத்தை தொடர்ந்து முன்னெடுக்க, டோக் மின் போன்ற முதலமைச்சர் நமக்கு தேவை.
அதேசமயம் சிரம்பான் ஜெயா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் இளம் வேட்பாளர் முகுந்தனை வெற்றி பெற செய்யுங்கள் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
சிரம்பான் ஜெயாவில் மக்களுக்கான சேவை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுவதற்காக, 40 வயதான இளம் மற்றும் திறமையான புதிய வேட்பாளரான முகுந்தனை அறிமுகப்படுத்துகிறோம்.
முகுந்தன் இப்பகுதிக்கு புதியவர் அல்ல. இப்பகுதியின் சூழலையும், மக்களின் தேவைகளையும் நன்கு அறிந்தவர்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான டத்தோ பி. குணசேகரனின் சிறப்பு அதிகாரியாக பணியாற்றிய அனுபவம் அவருக்கு உள்ளது.
மக்களின் குறைகளைத் தீர்ப்பது, அரசாங்க நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுவது மற்றும் உள்ளாட்சி நிர்வாக விவகாரங்களைக் கையாள்வது போன்ற துறைகளில் அவருக்கு விரிவான அனுபவம் உள்ளது.
டத்தோ பி. குணசேகரனுடன் நெருக்கமாக இணைந்து பணியாற்றிய அனுபவம், சிரம்பான் ஜெயாவில் சேவையின் பாரம்பரியத்தைத் தொடர்ந்து முன்னெடுக்க அவரை மிகவும் தகுதியான வேட்பாளராக மாற்றியுள்ளது.
எனவே, சிரம்பான் ஜெயா தொகுதியின் அனைத்து வாக்காளர்களையும் வரவிருக்கும் வாக்குப்பதிவு நாளில் திரு. முகுந்தனுக்கு உறுதியான ஆதரவை வழங்குமாறு நான் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
உங்கள் ஒவ்வொரு வாக்கும் இப்பகுதியின் எதிர்காலத்தையும் மக்களின் நலனையும் தீர்மானிக்கும் மிக முக்கியமான சக்தியாகும்.
நாம் உருவாக்கியுள்ள ஒற்றுமையின் வேகத்தை வீணாக்காமல், அனைவரும் ஒன்றிணைந்து முன்னேறுவோம்.
சிரம்பான் ஜெயா தொடர்ந்து அர்ப்பணிப்பு, நேரம், மக்கள் மீதான அக்கறையுடன் சேவையாற்றும் தலைவரின் பிரதிநிதித்துவத்தைப் பெறுவதை உறுதி செய்வோம் என்றார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 5:25 pm
மலாக்கா மாநில ஆளுநர் பிறந்தநாள்: கல்வி அமைச்சர் FADLINA SIDEKக்கிற்கு டத்தோஸ்ரீ பட்டம்
August 24, 2026, 5:03 pm
திரைப்படத் துறை சார்ந்தவர்களை ஃபினாஸ் அழைக்கிறது; குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்படும்: அஸ்மிர்
August 24, 2026, 4:56 pm
மஸ்ஜித் இந்தியா முஸ்லிம் சுங்கை சிப்புட் இளைஞர் பிரிவின் மெர்டேக்கா நடைபயணம்
August 24, 2026, 4:44 pm
மெர்டேக்கா சதுக்கத்தில் தேசிய தின உரையை பிரதமர் அன்வார் நிகழ்த்துகிறார்
August 24, 2026, 4:08 pm
பள்ளி விடுமுறை, தேசிய விடுமுறை நாட்களுக்காக கே.டி.எம் 8 உத்தாரா ரயில் சேவைகளை வழங்குகிறது
August 24, 2026, 4:03 pm
