நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியாவிலிருந்து மத்திய கிழக்கு செல்லும் விமானங்கள் குறித்து அந்தந்த நிறுவனங்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்: மலேசிய வான் போக்குவரத்து ஆணையம் தகவல் 

கோலாலம்பூர்:

மத்திய கிழக்குக்குச் செல்லும், அங்கிருந்து வரும் அல்லது அவ்வழியாக இடைமாற்றம் செய்யும் பயணிகள் அனைவரும் தங்களின் பயண நிலவரங்களைச் சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களிடம் நேரடியாகக் கேட்டுச் சரிபார்த்துக்கொள்ளுமாறு மலேசியப் பொது விமானப் போக்குவரத்து ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

பாதுகாப்பு நிலவரத்தைக் கருத்தில்கொண்டு விமானச் சேவைகளின் பாதைகள் மாற்றப்படலாம்; அல்லது பயணக் கால அட்டவணைகள் திருத்தப்படலாம் என்று அது கூறியது.

சில குறிப்பிட்ட சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்படவும் வாய்ப்புள்ளது. இத்தகைய செயல்பாட்டு மாற்றங்களால் பயண நேரம் அதிகரிப்பதுடன், தாமதங்கள் அல்லது இணைப்பு விமானச் சேவைகளிலும் இடையூறுகள் நேரலாம்.

Kuala Lumpur International Airport (KUL/WMKK) | Arrivals, Departures &  Routes | Flightradar24

ஏற்கெனவே பல முன்னணி விமான நிறுவனங்கள் மேற்கு ஆசிய இலக்குகளுக்கான தங்களின் சேவைகளைத் தற்காலிகமாக நிறுத்தியும் ரத்து செய்தும் மாற்றியமைத்தும் அறிவித்துள்ளன.

குறிப்பாகப் பிரிட்டிஷ் ஏர்வேஸ், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், எமிரேட்ஸ், கேஎல்எம், ஏர் பிரான்ஸ் ஆகிய முக்கிய விமான நிறுவனங்கள் தங்களுடைய சேவை இடைநிறுத்தங்களை 2026ஆம் ஆண்டின் ஆகஸ்ட் பிற்பகுதி முதல் அக்டோபர்வரை நீட்டித்துள்ளன.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset