நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ராய்ஸ் யாத்திம்மிற்கு வழங்கப்பட்ட இரு மாநில கௌரவ பட்டங்கள் திரும்பப் பெறப்படுகின்றன: நெகிரி செம்பிலான் அரண்மனை அறிவிப்பு 

சிரம்பான்: 

முன்னாள் மந்திரி பெசார் ராய்ஸ் யாத்திம்மிற்கு நெகிரி செம்பிலான் மாநில அரண்மனை வழங்கிய Darjah Seri Utama Negeri Sembilan (S.P.N.S.) & Darjah Dato’ Setia Negeri Sembilan (D.S.N.S.) இரு கௌரவ பட்டங்களைத் திரும்ப பெறுவதாக நெகிரி செம்பிலான் அரண்மனை அறிவித்துள்ளது. 

இரு கௌரவ மாநில பட்டத்தை திரும்ப பெறுவதற்கு நெகிரி செம்பிலான் மாநில ஆட்சியாளர் துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவீர் இணக்கம் தெரிவித்ததாக அரண்மனை தரப்பு தெரிவித்தது. 

நெகிரி செம்பிலான் மாநிலத்தின் இறையாண்மை, புனிதத்தன்மை மற்றும் மரியாதையைப் பேணி காக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக நெகிரி செம்பிலான் பட்டங்களின் பதிவாளர் முகமது ஜாஃபிர் இப்ராஹிம் குறிப்பிட்டார். 

நெகிரி செம்பிலான் மாநிலத்தின் SPNS விருது டத்தோஶ்ரீ உத்தாமா பட்டத்தை கொண்டு வருகிறது. மேலும், DSNS விருது டத்தோ பட்டத்தைக் கொண்டு வருகிறது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset