செய்திகள் மலேசியா
நெகிரி செம்பிலான் மந்திரி புசார் வேட்பாளர் தேர்வை தேசிய முன்னணியிடம் தேசியக் கூட்டணி விட்டு விடுகிறது: ஹம்சா
சிரம்பான் :
நெகிரி செம்பிலான் மந்திரி புசார் வேட்பாளர் தேர்வை தேசிய முன்னணியிடம் தேசியக் கூட்டணி விட்டுவிடுகிறது.
வவாசான் கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின் இதனை கூறினார்.
இந்த முடிவை தேசியக் கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒப்புக்கொண்டுள்ளன.
மேலும் மந்திரி புசார் பற்றி விவாதிக்க விரும்பினால், தேசியக் கூட்டணியில் உள்ள நாங்கள் அதை தேசிய முன்னணியிடம் ஒப்படைத்துள்ளோம்.
நாங்கள் இதை தேசிய முன்னணிக்குத் தெரிவித்து சமர்ப்பித்துள்ளோம். மேலும் அனைத்துக் கட்சிகளிடமிருந்தும் ஒப்புதலைப் பெற்றுள்ளோம்.
சிரம்பானில் இரு கூட்டணி தலைவர்களுடன் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 5:25 pm
மலாக்கா மாநில ஆளுநர் பிறந்தநாள்: கல்வி அமைச்சர் FADLINA SIDEKக்கிற்கு டத்தோஸ்ரீ பட்டம்
August 24, 2026, 5:03 pm
திரைப்படத் துறை சார்ந்தவர்களை ஃபினாஸ் அழைக்கிறது; குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்படும்: அஸ்மிர்
August 24, 2026, 4:56 pm
மஸ்ஜித் இந்தியா முஸ்லிம் சுங்கை சிப்புட் இளைஞர் பிரிவின் மெர்டேக்கா நடைபயணம்
August 24, 2026, 4:44 pm
மெர்டேக்கா சதுக்கத்தில் தேசிய தின உரையை பிரதமர் அன்வார் நிகழ்த்துகிறார்
August 24, 2026, 4:08 pm
பள்ளி விடுமுறை, தேசிய விடுமுறை நாட்களுக்காக கே.டி.எம் 8 உத்தாரா ரயில் சேவைகளை வழங்குகிறது
August 24, 2026, 4:03 pm
