செய்திகள் மலேசியா
கோலாலம்பூர் மிட் வேலி சிட்டியில் போலி வெடிகுண்டு மிரட்டல்
பெட்டாலிங் ஜெயா-
கோலாலம்பூரில் உள்ள MID VALLEY CITY பேரங்காடியின் CENTRE POINT SOUTH TOWER இல் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படும் என்று மின்னஞ்சல் ஒன்றில் தகவல் கிடைத்ததாக போலிஸ் உறுதிப்படுத்தியது
நேற்றிரவு 8.17 மணி ஒரு மின்னஞ்சல் மூலம் இந்த தகவல் கிடைக்கப்பெற்று போலிஸ் தரப்புக்கு தெரிவிக்கப்பட்டதாக பிரிக்ஃபீல்ஸ் மாவட்ட போலிஸ் தலைவர் ஹூ சாங் ஹொக் கூறினார்.
பாதுகாப்பு நடவடிக்கைக்காக சம்பந்தப்பட்ட கட்டிடம் உடனடியாக காலி செய்யப்பட்டதாகவும் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு இருப்பிடம் குறித்து சோதனை செய்யப்பட்டது.
ஒரு முழுமையான ஆய்வின் முடிவுகளின்படி, சம்பவ இடத்தில் வெடிபொருட்கள், சந்தேகத்திற்கிடமான பொருட்கள் அல்லது வெடிகுண்டு தொடர்பான உபகரணங்கள் எதுவும் கண்டெடுக்கப்படவில்லை.
வெடிகுண்டு மிரட்டல் என்பது போலியான தகவல் என்றும் இது பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது
இந்த சம்பவம் 1998 தொடர்பு பல்லூடக சட்டத்தின் செக்ஷன் 233 மற்றும் செக்ஷன் 505இன் கீழ் விசாரணை செய்யப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 5:25 pm
மலாக்கா மாநில ஆளுநர் பிறந்தநாள்: கல்வி அமைச்சர் FADLINA SIDEKக்கிற்கு டத்தோஸ்ரீ பட்டம்
August 24, 2026, 5:03 pm
திரைப்படத் துறை சார்ந்தவர்களை ஃபினாஸ் அழைக்கிறது; குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்படும்: அஸ்மிர்
August 24, 2026, 4:56 pm
மஸ்ஜித் இந்தியா முஸ்லிம் சுங்கை சிப்புட் இளைஞர் பிரிவின் மெர்டேக்கா நடைபயணம்
August 24, 2026, 4:44 pm
மெர்டேக்கா சதுக்கத்தில் தேசிய தின உரையை பிரதமர் அன்வார் நிகழ்த்துகிறார்
August 24, 2026, 4:08 pm
பள்ளி விடுமுறை, தேசிய விடுமுறை நாட்களுக்காக கே.டி.எம் 8 உத்தாரா ரயில் சேவைகளை வழங்குகிறது
August 24, 2026, 4:03 pm
