செய்திகள் இந்தியா
FIFA உலகக் கிண்ணப் போட்டியை முன்னிட்டு கேரளாவில் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் நாளை விடுமுறை: கேரளக் கல்வி அமைச்சர் என்.சம்சுதீன் அறிவிப்பு
திருவனந்தபுரம்:
ஃபிஃபா உலகக் கிண்ண கால்பந்து இறுதிப் போட்டியை முன்னிட்டு, கேரளாவில் அனைத்துப் கல்வி நிறுவனங்களுக்கும் நாளை (திங்கட்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 19) அதிகாலையில் நடைபெறவுள்ள அர்ஜெண்டினா - ஸ்பெயின் அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியைப் பார்க்க விரும்பும் மாணவர்களின் கோரிக்கைகளை ஏற்று கேரளாவில் நாளை (திங்கட்கிழமை) அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரள பொதுக் கல்வித் துறை அமைச்சர் என்.சம்சுதீனும் தனது சமூக ஊடகப் பக்கங்கள் வாயிலாக இந்த விடுமுறை அறிவிப்பை வெளியிட்டார்.
அமைச்சர் என்.சம்சுதீன் வெளியிட்ட அந்தப் பதிவில், "இப்போது மகிழ்ச்சியா, குழந்தைகளே?. கால்பந்து விளையாட்டு ஆர்வலர்களான மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, இன்று நள்ளிரவுக்குப் பிறகு நடைபெறவுள்ள பிஃபா உலகக் கோப்பை இறுதிப் போட்டியை முன்னிட்டு, கேரள பொதுக் கல்வித் துறையின் கீழ் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்ளுக்கும் திங்கட்கிழமை (ஜூலை 20) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, அர்ஜென்டினா, ஸ்பெயின் அணிகளுக்கு இடையிலான பிஃபா உலகக் கோப்பை இறுதிப் போட்டியை முன்னிட்டு, திங்கட்கிழமை அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்குமாறு சிபிஎம் தலைவரும் முன்னாள் கேரளக் கல்வி அமைச்சருமான வி. சிவன்குட்டி மாநில அரசை வலியுறுத்தியிருந்தார்.
திங்கட்கிழமை அதிகாலை வரை போட்டி நீடிக்கும் என்பதால், மாணவர்கள் சரியான நேரத்தில் பள்ளிக்குச் செல்வது கடினமாக இருக்கும் என்று சிவன்குட்டி கூறினார்.
மேலும், யுடிஎஃப் கூட்டணியைச் சேர்ந்த பல தலைவர்களும் இதேபோன்று விடுமுறை கோரிக்கைகளை விடுத்திருந்தனர்.
நாளைய விடுமுறைக்கு பதிலாக அடுத்துவரும் சனிக்கிழமை கல்வி நிறுவனங்களை இயக்கி சமன் செய்து கொள்ளலாம் என்று யோசனை கூட தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 23, 2026, 3:13 pm
பிகாரில் கொட்டித்தீர்த்த கனமழை: 50 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிப்பு
September 21, 2026, 10:20 pm
2030-க்குள் மணிக்கு 350 கி.மீ. வேகத்தில் செல்லும் ‘சுதேசி’ புல்லட் ரயில் தயாரிக்க இந்திய அரசு இலக்கு
September 16, 2026, 12:22 pm
இந்தியாவின் வட மாநிலங்களில் கடும் வெள்ளம்: 20 பேர் மாண்டனர்
September 14, 2026, 11:27 pm
மே.வங்கத்தில் 252 மதரஸாக்கள் மூட மாநில பாஜக அரசு உத்தரவு: மேலும் 100 கல்வி நிறுவனங்களுக்கு நோட்டீஸ்
September 12, 2026, 10:40 pm
பிரிக்ஸ் விருந்தினர்களுக்கு பிஹாரின் பிரபல உணவு வகை
September 10, 2026, 1:02 pm
பிரிக்ஸ் மாநாடு: புதின், ஷி ஜின்பிங், அன்வார் இப்ராஹிம் பங்கேற்கின்றனா்
September 7, 2026, 9:32 pm
