நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

கம்போடியாவில் கண்ணிவெடி கண்டுபிடிக்கும் எலி மரணம்

பெனோம் பென்:

கம்போடியாவில் கண்ணிவெடிகளை நுகர்ந்து அவற்றைக் கண்டுபிடிப்பதில் பதக்கம் பெற்ற சிறப்பு எலி சென்ற வாரயிறுதியில் இறந்துவிட்டதாக அதனைப் பராமரித்து அதற்குப் பயிற்சி வழங்கிய பெல்ஜிய அறநிறுவனம் APOPO தெரிவித்துள்ளது. 

8 வயதான மகாவா என்ற அந்த ராட்சத ஆப்பிரிக்க எலி தான்ஸானியாவைச் சேர்ந்தது. 

அது தன் வாழ்நாளில் மொத்தம் 225,000 சதுர மீட்டர் நிலத்தில் இருந்த கண்ணிவெடிகளைக் கண்டுபிடித்து அவற்றை அகற்ற உதவியிருக்கிறது. 

சுமார் 100க்கும் மேற்பட்ட கண்ணிவெடிகளைக் கண்டுபிடித்தபின், மகாவா சென்ற ஆண்டு ஜூன் மாதத்தில் அதன் வேலையிலிருந்து "ஒய்வுபெற்றது".

மகாவா மாண்ட ஒருவாரத்துக்கு முன்பு கூட, அது உற்சாகத்துடன் விளையாடிக் கொண்டிருந்ததாக நம்பப்படுகிறது. 

ஆனால் அதன் கடைசி சில நாள்களில் மகாவா கூடுதல் நேரம் தூங்கியதாகவும் உணவு உண்பதில் அதிக ஆர்வங்காட்டாததாகவும் APOPO குறிப்பிட்டது. 

அது நிம்மதியுடன் எந்தவித நோயுமின்று மரணமடைந்ததாகக் கூறப்பட்டது. 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset