செய்திகள் மலேசியா
நெகிரி செம்பிலான் தேர்தல்: தேசியக் கூட்டணி சார்பில் 3 இந்தியர்கள் போட்டி
சிரம்பான்:
நெகிரி செம்பிலான் தேர்தலில் தேசியக் கூட்டணி சார்பில் 3 இந்தியர்கள் போட்டியிடவுள்ளனர்.
நெகிரி செம்பிலான் தேர்தல் வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்த தேர்தலை தேசியக் கூட்டணி தேசிய முன்னணியுடன் இணைந்து எதிர்கொள்கிறது.
இதன் அடிப்படையில் தேசியக் கூட்டணி 11 தொகுதிகளில் மட்டும் போட்டியிடுவதாக அதன் தலைவர் அஹ்மத் சம்சுரி அறிவித்தார்.
மேலும் இந்த 11 வேட்பாளர்களின் மூன்று இந்தியர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மலேசிய இந்திய ஐக்கிய கட்சியைச் சேர்ந்த சதீஸ்குமார் லுக்குட் தொகுதியில் போட்டியிடவுள்ளார்.
அதே வேளையில் பாஸ் கட்சியைச் சேர்ந்த டாக்டர் குமார் லோபாக் தொகுதியிலும் வவாசான் கட்சியைச் சேர்ந்த எரிக் மைக்கல் மம்பாவ் தொகுதியிலும் போட்டியிடவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
