நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நெகிரி செம்பிலான் தேர்தல்; தேசிய முன்னணியுடனான ஒத்துழைப்பு உறுதியானது: மீதமுள்ள 11 வேட்பாளர்களை தேசியக் கூட்டணி அறிவித்தது

அம்பாங்கான்:

நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் போட்டியிடும் கூட்டணியின் 11 வேட்பாளர்களை தேசியக் கூட்டணி அறிவித்ததன் மூலம் தேசிய முன்னணியுடனான தனது ஒத்துழைப்பை உறுதி செய்தது.

நேற்று இரவு தேசிய முன்னணி 25 வேட்பாளர்களை அறிவித்ததைத் தொடர்ந்து 11 இடங்கள் காலியான நிலையில், இதன் மூலம் மொத்த இடங்களின் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது.
பாஸ் கம்போங் இஸ்மாயில் அம்பாங்கன் தலைமையகத்தில் நடைபெற்ற தேசியக் கூட்டணி வேட்பாளர் அறிவிப்பு நிகழ்வில் தேசியக் கூட்டணி தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சம்சூரி மொக்தார் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

இடப் பங்கீட்டில் பாஸ் ஐந்து வேட்பாளர்களையும், வவாசான் நான்கு வேட்பாளர்களையும், கெராக்கான், எம்ஐபிபி தலா ஒரு வேட்பாளரையும் களமிறக்குகிறது.

பாஸ் கட்சியைச் சேர்ந்த முகமத் பைரூஸ் செர்திங் தொகுதியையும் கமாரூல் ரிட்சுவான் பாரோய் தொகுதியையும் அப்துல் ஃதாஹ் பாகான் பினாங் தொகுதியையும் தற்காக்கவுள்ளனர்.
மேலும் பாஸ் புதுமுக வேட்பாளரையும் நிறுத்துகிறது.

முன்னாள் நெகிரி செம்பிலான் ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ டாக்டர் முஹம்மது ரஃபி அம்பாங்கான் தொகுதியிலும் டாக்டர் குமார் லோபாக் தொகுதியிலும் போட்டியிடுவர்.

டத்தோஸ்ரீ ஹம்சா தலைமையிலான வவாசான் கட்சி நான்கு இடங்களில் போட்டியிடுகிறது.

டெனிஸ் ராய்ஸ் கிளாவாங் தொகுதியிலும் டத்தோ ரசாலி சிகாமட் தொகுதியிலும் எரிக் மைக்கல் மம்பாவ் தொகுதியிலும் ரிட்சுவான் அஹ்மாத் கெமாஸ் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

மேலும் கெராக்கான் கட்சியின் லீ பூன் சியான் புக்கிட் கெபாயான் தொகுதியில் போட்டியிடுகிறார்.

அதே போன்று எம்ஐபிபியின் சதீஸ்குமார் லுக்குட் தொகுதியில் போட்டியிடுகிறார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset