செய்திகள் மலேசியா
இரண்டாம் வகை நீரிழிவு நோய்: 14 வயதிலேயே கண்டறியப்பட்டுள்ளது: சுகாதார அமைச்சர் டாக்டர் சுல்கிஃப்ளி அஹ்மத் தகவல்
பெட்டாலிங் ஜெயா-
இரண்டாம் வகை நீரிழிவு நோயானது 14 வயதிலேயே கண்டறியப்பட்டுள்ளது. இந்த தகவலை நாட்டின் சுகாதார அமைச்சர் டத்தோஶ்ரீ டாக்டர் சுல்கிஃப்ளி அஹ்மத் கூறினார்.
இந்த போக்கு என்பது மிகுந்த வேதனைக்குரியதாக பார்க்கப்படுகிறது. இளம் தலைமுறையினர் உயர் இரத்த அழுத்தம், உடலில் சீனியின் அளவு அதிகம், மற்றும் உடல் பருமன் ஆகிய பிரச்சனைகளைக் கொண்டிருப்பதாக அமைச்சர் விவரித்தார்
பல இளைஞர்கள் தங்களுக்கு தொற்றா நோய்களுக்கான (NCD) ஆபத்துக் காரணிகள் இருப்பதை அறியாமல் இருக்கிறார்கள் என்பதை NHSI 2025-இன் கண்டுபிடிப்புகள் காட்டுவதாக அவர் விளக்கினார்.
பரிசோதிக்கப்பட்ட 18 முதல் 30 வயதுக்குட்பட்ட 347,813 நபர்களில், 341,257 பேர், அதாவது 98.1%, தொற்றா நோய்கள் இருந்ததற்கான எந்த வரலாறும் இல்லாதவர்களாகவும், தாங்கள் ஆபத்தில் இருப்பதை அறியாதவர்களாகவும் இருந்தனர்.
தொற்றா நோய்களும் அவற்றின் ஆபத்துக் காரணங்களும் இளம் வயதினரை அதிகளவில் பாதித்து வருவதாகவும், எனவே அவற்றை முன்கூட்டியே கண்டறியும் முயற்சிகளும் மேலும் தீவிரமான சுகாதாரத் தலையீடுகளும் தேவைப்படுகின்றன என்றும் NHSI புள்ளிவிவரங்கள் காட்டுவதாக சுல்கிஃப்ளி அஹ்மத் குறிப்பிட்டார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 17, 2026, 12:42 am
நெகிரி செம்பிலான் தேர்தல்: தேசியக் கூட்டணி சார்பில் 3 இந்தியர்கள் போட்டி
July 16, 2026, 6:46 pm
