செய்திகள் மலேசியா
நெகிரி செம்பிலான் மாநில தேர்தலில் மூடா கட்சி போட்டியிடாது: மூடா தலைவர் அமீரா அய்ஷா அப்துல் அஸிஸ் தகவல்
பெட்டாலிங் ஜெயா-
நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற தேர்தலில் மூடா கட்சி போட்டியிடாது என்று மூடா கட்சியின் தேசிய தலைவர் அமீரா அய்ஷா அப்துல் அஸிஸ் அறிவித்தார்.
ஜொகூர் மாநில சட்டமன்ற தேர்தலில் மூடா கட்சி மிக மோசமான தோல்வியைச் சந்தித்த நிலையில் அக்கட்சி இந்த முடிவை எடுத்ததாக அவர் சொன்னார்
இருப்பினும் மூடா கட்சி தங்கள் கூட்டணியில் உள்ள பார்ட்டி சொசியலிஸ் கட்சியான PSM கட்சிக்கு இந்த முறை ஆதரவு அளிக்கும் என்று அவர் தெளிவுப்படுத்தினார்
மூடா கட்சி அடுத்த 16ஆவது பொதுத்தேர்தலில் களம் காண முழு தீவிரம் காட்டி வருவதாகவும் குறிப்பிட்டது
மூடா கட்சி நடப்பில் மூவார் நாடாளுமன்ற தொகுதியைக் கொண்டுள்ளது. மூவார் நாடாளுமன்ற உறுப்பினராக சையத் சாடிக் சையத் அப்துல் ராஹ்மான் உள்ளார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 17, 2026, 12:42 am
நெகிரி செம்பிலான் தேர்தல்: தேசியக் கூட்டணி சார்பில் 3 இந்தியர்கள் போட்டி
July 16, 2026, 6:46 pm
