செய்திகள் மலேசியா
நெகிரி செம்பிலானில் பெஜுவாங் கட்சி வேட்பாளரை நிறுத்தவில்லை
சிரம்பான்:
நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் வேட்பாளரை நிறுத்தப் போவதில்லை என பெஜுவாங் கட்சி அறிவித்துள்ளது.
தேசியக் கூட்டணி வேட்பாளர்களை அறிவிப்பதற்கு முன்னதாக, இந்த அறிவிப்பை அதன் தலைவர் முக்ரிஸ் மகாதீர் இன்று மாலை வெளியிட்டார்.
ஜொகூர் மாநிலத் தேர்தலுக்குப் பிந்தைய பிரச்சினைகள் மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலுக்கான கட்சியின் திசைவழி குறித்து விவாதித்த பெஜுவாங் மத்திய செயற்குழு கூட்டத்தைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
நெகிரி செம்பிலான் மாநிலத்தின் 11 தொகுதிகளில் போட்டியிடவிருக்கும் அனைத்து தேசியக் கூட்டணி வேட்பாளர்களுக்கும் ஆதரவளிப்பதிலும், பிஎன் பிரச்சாரத்திற்கு உதவுவதிலும் பெஜுவாங் உறுதியாக உள்ளது என்று அவர் கூறினார்.
சமீபத்தில் நடந்த ஜொகூர் மாநிலத் தேர்தலில், போட்டியிட்ட ஒரு தொகுதியில் பெஜுவாங் தோல்வியடைந்தது.
முன்னதாக, பெர்சாமா மலேசியா, மூடா கட்சிகள் நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் பங்கேற்கப் போவதில்லை என்று அறிவித்திருந்தன.
- பார்த்திபன் நாகராஜன்
