செய்திகள் தமிழ் தொடர்புகள்
சென்னையில் விமானப்படை ஹெலிகாப்டர் இயந்திரக் கோளாறால் அவசரமாக தரையிறக்கம்
சென்னை:
சென்னை தாம்பரம் அருகே விமானப்படை ஹெலிகாப்டர் ஒன்று, இயந்திரக் கோளாறு காரணமாக திடீரென தரையிறங்கியது.
சென்னை தாம்பரம் விமானப்படை பயிற்சி நிறுவனத்துக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் இசட்ஏ 1420 (ZA 1420) இன்று பயிற்சியில் ஈடுபட்டிருந்தது.
அப்போது சென்னை வண்டலூர் அடுத்த கீரப்பாக்கத்தில் ஹெலிகாப்டர் திடீரென தரையிறங்கியது. இயந்திரக் கோளாறு காரணமாக, ராணுவத்திற்கு சொந்தமான இடத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
விமானப்படை அதிகாரிகள் வந்து ஹெலிகாப்டரை ஆய்வு செய்து அதனை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் அப் பகுதியில் உள்ள மக்கள் ஹெலிகாப்டரை பார்வையிட்டுச் செல்கின்றனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 4:12 pm
ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசம்: சட்டப் பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு
August 22, 2026, 4:35 pm
திமுகவில் மாற்றங்களை செய்த ஸ்டாலின்: 9 அதிரடி தீர்மானங்கள் நிறைவேற்றம்
August 21, 2026, 9:23 pm
“கார் வாங்குவதில் காட்டும் வேகத்தை குறுவை தொகுப்பில் காட்டாதது ஏன்?”: உதயநிதி கேள்வி
August 20, 2026, 11:53 am
பிரதமர் மோடி அமைச்சரவையில் 20 பேர் இலாகா விரைவில் மாற்றம்: புதிதாக திமுகவும் இடம்பெற இருப்பதாக தகவல்
August 18, 2026, 1:05 pm
சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு
August 17, 2026, 6:34 pm
