செய்திகள் தமிழ் தொடர்புகள்
1990 முதல் மக்கள் பணி செய்து வருகிறேன்: சட்டசபையில் விஜய் பேச்சு
சென்னை:
1990 முதல் மக்களுக்கு பல்வேறு நலப்பணிகளைச் செய்தே அரசியலுக்கு வந்துள்ளதாக பேரவையில் முதல்வர் ஜோசப் விஜய் பேசினார்.
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது முதல்வர் விஜய் பதிலளித்து சட்டப்பேரவையில் பேசினார்.
நான் ஒன்றும் சாதாரணமாக அரசியலுக்கு வந்துவிடவில்லை. சாதாரண நடிகனாக இருந்து உயர்ந்த நிலைக்குச் சென்றதுக்கு காரணம் தமிழக மக்களின் அன்பும் அரவணைப்பும். அது கடவுளும் மக்களும் தந்த மிகப்பெரிய வரம்.
1990 களில் ரசிகர் மன்றம் ஆரம்பித்து மக்களுக்கு பணிகளைச் செய்தோம். அடுத்து நற்பணி மன்றமாகவும் விஜய் மக்கள் இயக்கமாகவும் மாறியது. 2008ல் ஈழத்தமிழருக்கு ஆதரவாக போராட்டம் நடத்தினோம்.
கரோனா, வெள்ள நிவாரணம், கல்வி, சமூகப் பணிகள் என பல வழிகளில் மக்களுக்கு துணையாக இருந்தோம்.
ஊழல் எதிர்ப்பு, கல்வி, அரசியல் என படங்களின் மூலமாகவும் பேசியிருக்கிறேன். அதனால் அந்த அரசியல் படங்கள் சந்திக்காத பிரச்னை இல்லை.
2011ல் மீனவர்களுக்கு ஆதரவாக ஒரு பொதுக்கூட்டம் நடத்தினோம். 2017ல் ஜல்லிக்கட்டு போராட்டம், 2018ல் ஸ்டெர்லைட் போராட்டத்தில் நேரில் சந்தித்து பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவு தெரிவித்தோம்.
2021 உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றோம். கல்வி விருது விழா நடத்தி வருகிறோம்.
அதன்பின்னர் 2024ல் கட்சி ஆரம்பித்து, 2 பெண் கொள்கைத் தலைவர்களைக் கொண்ட கட்சியாக உருவெடுத்து மாநாடுகளை நடத்தி இன்று ஆட்சியில் அமர்ந்திருக்கிறோம். அது அவ்வளவு சாதாரணமானதாக இல்லை.
எல்லோரும் கட்சி ஆரம்பித்து ஒவொருவரின் வீட்டுக்குள் செல்வார்கள். ஆனால் நான் ஒவ்வொரு வீட்டுக்குள் போனபிறகுதான் கட்சியை ஆரம்பித்தேன்.
கரூர் சம்பவத்தில் எங்கள் மேலேயே பழி போட்டதுலாம் வேற லெவல். அரசியல் இவ்வளவு மோசமாக இருக்குமா தெரியுமா?" என்று பேசினார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 6, 2026, 5:41 pm
தமிழகத்தின் 23 மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
October 6, 2026, 11:29 am
மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது
October 5, 2026, 12:04 pm
தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளில் இடைத்தேர்தல்: தொகுதிகளுக்குட்பட்ட பள்ளிகளுக்கு இரு நாள்கள் விடுமுறை
October 4, 2026, 12:18 pm
தமிழ்நாட்டில் ஒரே நாளில் 500 மி.மீ. மழைப்பொழிவுக்கு வாய்ப்பு
October 3, 2026, 5:00 pm
"ஆபாசம், வன்மம், வக்கிரம்...": ஸ்டாலினைக் வன்மையாகச் சாடிய விஜய்
October 1, 2026, 5:51 pm
தாராபுரத்தில் சத்தியபாமா காதில் அமைச்சர் ராஜ் மோகன் சொன்னது என்ன?: அமைச்சர் தன்னிலை விளக்கம்
September 30, 2026, 1:33 pm
பட்டினப்பாக்கத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்: புதிய தலைமைச் செயலகம் அமைக்க கடும் எதிர்ப்பு
September 29, 2026, 10:14 pm
2 நாளில் 9 கொலைகள் - ரீல்ஸ் ஆட்சியை யாருக்காக நடத்துகிறார் முதல்வர் விஜய்?: உதயநிதி கேள்வி
September 28, 2026, 5:43 pm
