செய்திகள் உலகம்
G7 உச்சநிலைக் கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெனிவாவில் ஆர்ப்பாட்டம்: Tesla காரை எரித்தனர் பேராட்டவாதிகள்
ஜெனிவா:
சுவிட்சர்லந்தின் ஜெனீவா நகரில் காவல்துறையினருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே வன்முறை வெடித்துள்ளது.
இவியன் (Evian) நகரில் G7 உச்சநிலைக் கூட்டம் நடக்கவிருக்கும் வேளையில் அந்தச் சம்பவம் அரங்கேறி உள்ளது.
ஐக்கிய நாட்டு நிறுவனக் கட்டடம் அருகே தொடங்கிய வன்முறை மாலை வரை நீடித்தது.
காவல்துறையினர் தண்ணீரைப் பீய்ச்சியடித்தும் கண்ணீர்ப் புகையைப் பயன்படுத்தியும் கூட்டத்தைக் கலைத்தனர்.
நகரின் நடுவே ஊர்வலம் சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒரு டெஸ்லா காருக்குத் தீ வைத்தனர்.
வங்கிச் சன்னல்களை உடைத்தனர். காவல்துறையினர் மீது கற்களை எறிந்தனர்.
பேரணியில் சுமார் 20,000 பேர் கலந்து கொண்டதாகத் தெரிகிறது.
G7 கூட்டணி வேண்டாம் என்று சொல்லும் அமைப்பு பேரணியை வழிநடத்தியது.
அரசியல், பொருளாதார அதிகாரம் பெரும் பணக்கார நாடுகான G7 நாடுகளின் வசம் இருப்பதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறினர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 12:02 pm
சிங்கப்பூர் பிரதமர் வோங் தேசிய தினக் கொண்டாட்டத்தில் வெளியிட்ட அறிவிப்புகள்
August 23, 2026, 1:02 pm
அமெரிக்காவிற்கு எதிராக கனடா கடும் வரிப்பிரகடனம்
August 23, 2026, 12:46 pm
சிங்கப்பூருக்கு வந்துகொண்டிருந்த சரக்குக் கப்பல் கவிழ்ந்தது
August 22, 2026, 4:20 pm
பெற்றோர் அனுமதியின்றி சிறார் விவரங்கள் சேகரித்த TikTok: US$400 மில்லியன் இழப்பீடு தர ஒப்புதல்
August 22, 2026, 10:33 am
சுவீடன் பள்ளியில் பயங்கரம்: வாளைக் கொண்டு தாக்குதல் நடத்தியதில் ஒருவர் பலி, மூவர் காயம்
August 22, 2026, 10:31 am
ஐரோப்பாவை உலுக்கிய கோடைக்கால வெப்ப அலை: 30,000க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
August 21, 2026, 9:45 pm
வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ருல் இஸ்லாம் தேர்வு
August 20, 2026, 2:50 pm
ஜப்பானில் அதிதீவிர கனமழை காரணமாக 13 பேர் பலி
August 20, 2026, 2:49 pm
