நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெர்சாமா கட்சியால் 50 வயதுக்குட்பட்ட  70% வேட்பாளர்களை களமிறக்க முடியும்: ரபிசி

சிரம்பான்:

ஜொகூர், நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களில் 70% வேட்பாளர்களில் 50 வயதுக்குட்பட்டவர்களாக நிறுத்த பெர்சாமா மலேசியா கட்சி  திட்டமிட்டுள்ளது.

இதனால் வயதானவர்கள் கோபப்பட வேண்டாம் என்று ரபிசி ரம்லி கூறினார். 

ஏனென்றால் இன்னும் 30% பேர் இருக்கிறார்கள். அந்த எண்ணிக்கை மிகவும் பெரியது.
மேலும் 50% என்ற இலக்குடன், பல பெண் வேட்பாளர்களை நிறுத்த தனது கட்சி தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யும்.

நெகிரி செம்பிலானின் சிரம்பானில் நேற்று நடந்த ஒரு உரையாடலில் பெர்சாமா தலைவர் ரபிசி ரம்லி இதனை கூறினார்.

மலாய், சீன, இந்திய சமூகங்களைச் சேர்ந்த தகுதியான பெண் வேட்பாளர்கள் முன்வந்து எங்கள் வேட்பாளர்களாகப் போட்டியிட வேண்டும்.

மூன்று வாரங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட பெர்சமா கட்சியில் சுமார் 25,000 பேர் இணைந்தனர்.

ஒரு மாதத்திற்குள் இந்த எண்ணிக்கையை 50,000 ஆக உயர்த்த முடியும் என நம்புவதாக ரபிசி கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset