நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டிரெய்லர் லோரி கார் மீதி கவிழ்ந்த சம்பவத்தில் குழந்தை உட்பட 4 பேர் உயிரிழந்தனர்

காராக்:

டிரெய்லர் லோரி கார் மீதி கவிழ்ந்த சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த குழந்தை உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் பெந்தோங்கில் இருந்து காராக் நோக்கிச் செல்லும் கிழக்குக் கடற்கரை நெடுஞ்சாலையின் 43.2 கி.மீட்டரில் நிகழ்ந்தது.

இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் 55 வயதான ஏ. ஹலீம் ஹசூன், 58 வயதான ரோசிதா புவாங், 26 வயதான நோர்பஹ்யா ஏ. ஹலீம், ஒரு வயதான நைலா அஃப்யா ஐசாத் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

டிரெய்லர் லோரியின் 40 வயது ஓட்டுநர் காயமடைந்ததாக பகாங் தீயணைப்புத் துறையின் செயல்பாடுகள் பிரிவின் உதவி இயக்குநர் முகமது சலாவூடின் ஈசா தெரிவித்தார்.

தீயணைப்புப் படையினர் இயந்திரங்களும், சிறப்பு மீட்பு உபகரணங்களைப் பயன்படுத்தி ஹோண்டா சிட்டி காரில் சிக்கியிருந்த பாதிக்கப்பட்டவரை மீட்க நடவடிக்கை எடுத்தனர்.

மேலும் பாதிக்கப்பட்ட அனைவரும் தங்களது காயங்கள் காரணமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

பின்னர், பாதிக்கப்பட்டவர்களின் உடல்கள் மேலதிக நடவடிக்கைக்காக போலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset