செய்திகள் தமிழ் தொடர்புகள்
பாலியல் சம்பவங்கள் நடக்காமல் இருக்க அரபு நாடு போல பொது இடத்தில் என்கவுண்டர் செய்து கொல்ல வேண்டும்: பிரேமலதா
சென்னை:
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், ஆலங்குடியில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தமிழக அரசு அறிவித்த விவசாயக் கடன் தள்ளுபடி அறிவிப்பு திருப்தி இல்லை என்பதால் தமிழகம் முழுவதும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே, விவசாயிகளின் கடன்கள் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.
தமிழகம் முழுவதும் பாலியல் வன்கொடுமை சம்ப வங்கள் நடந்து வருகின்றன. சிறுமிகள் முதல் வயதான பெண்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். ஆட்சிக்கு வந்து 6 மாதம் அவகாசம் கொடுப்போம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
ஆனால், அதே நேரத்தில் அந்த 6 மாதங்களுக்குள் அதிகளவிலான பாலியல் பிரச்சினைகளும், கொலை சம்பவங்களும் நிகழ்ந்து விடக்கூடாது.
பாலியல் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டும் எனில் அரபு நாடுகளில் தண்டனை கொடுப்பது போல, பொதுமக்கள் கூடும் இடத்தில் வைத்து தண்டனை கொடுக்க வேண்டும் அல்லது என்கவுன்ட்டர் செய்து கொல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 4:12 pm
ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசம்: சட்டப் பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு
August 22, 2026, 4:35 pm
திமுகவில் மாற்றங்களை செய்த ஸ்டாலின்: 9 அதிரடி தீர்மானங்கள் நிறைவேற்றம்
August 21, 2026, 9:23 pm
“கார் வாங்குவதில் காட்டும் வேகத்தை குறுவை தொகுப்பில் காட்டாதது ஏன்?”: உதயநிதி கேள்வி
August 20, 2026, 11:53 am
பிரதமர் மோடி அமைச்சரவையில் 20 பேர் இலாகா விரைவில் மாற்றம்: புதிதாக திமுகவும் இடம்பெற இருப்பதாக தகவல்
August 18, 2026, 1:05 pm
சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு
August 17, 2026, 6:34 pm
