செய்திகள் தமிழ் தொடர்புகள்
ஹஜ்ஜுப் பெருநாளை மகிழ்ச்சியோடு கொண்டாடும் தமிழக முஸ்லிம்கள்: தலைவர்கள் வாழ்த்து
சென்னை:
தியாகத் திருநாள் எனும் பக்ரீத் பண்டிகை, அனைவருக்கும் மகிழ்ச்சி, புதிய நம்பிக்கையை அளிக்கட்டும் என்று ஆளுநர் மற்றும் அரசியல் கட்சித்தலைவர்கள் வாழ்த்து தெரிவித் துள்ளனர்.
பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படுவதையொட்டி தமிழக முதல்வர், அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட செய்தி வருமாறு:
முதல்வர் விஜய்:
இறைநம்பிக்கை, தியாகம், கருணை, பகிர்வு, மனிதநேயம் ஆகிய உயரிய விழுமியங்களை மனிதகுலத்துக்கு உணர்த்தும் புனிதப் பெருநாளாக பக்ரீத் திகழ்கிறது. ஏழை, எளிய மக்களுடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள வேண்டும், சமூகத்தில் அன்பும், சமத்துவமும் நிலைக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தும் பக்ரீத்திருநாளில் சமுதாயத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் தழைத்தோங்க வேண்டும்.
திமுகதலைவர் ஸ்டாலின்:
பக்ரீத் திருநாளில், என்றென்றும் என் நேசத்துக்கும் பாசத்துக்கும் உரியோராகத் திகழும் இஸ்லாமிய மக்கள் அனைவருக்கும் எனது இனிய வாழ்த்துகள், அவர்களது வாழ்வில் நலமும் வளமும் பெருகட்டும்.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி:
இறைத் தூதரின் தியாகங்களை மனதில் நிலைநிறுத்தி, மனித நேயம் தழைக்க அர்ப்பணிப்பு உணர்வுடன் பாடுபடுவோம் என இந்த பக்ரீத் திருநாளில் நாம் அனைவரும் உறுதியேற்போம்.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை:
தமிழகம் எப்போதும் மதச்சார்பற்ற தன்மையையும், ஒற்றுமையையும் உயர்வாக மதித்து வருகிறது. அந்த நல்லிணக்க மரபு என்றும் நிலைத்திருக்க இந்த புனிதநாளில் அனைவரும் உறுதி மொழி ஏற்க வேண்டும்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ:
சகோதர சமயத்தாருடன் விருந்துண்டு மகிழ்ந்து, சமயநல்லிணக்கத்துக்கும் சமூக ஒற்றுமைக்கும் வலுச் சேர்க்க வாய்த்திட்ட இந்நாள் ஒரு பொன்னாள் ஆகும்.
பாமக தலைவர் அன்புமணி:
உலகம் முழுவதும் அன்பு, அமைதி, சகோதரத்துவம், நல்லிணக்கம், ஒற்றுமை, மகிழ்ச்சி, வளம் உள்ளிட்டவை செழிக்க வேண்டும் என்று கூறி பக்ரீத் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா: எத்தகைய சூழலும் நம்மை நிலைகுலைய வைக்கக் கூடாது. இறைதூதர்கள் இப்ராஹீம், இஸ்மாயீல் போன்று சோதனையான சூழலை எதிர்கொண்டு வீரியமாக மக்கள் பணிகளை மேற்கொள்ள, நம்மை தியாகம் செய்திட உறுதியெடுப்போம்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 6, 2026, 5:41 pm
தமிழகத்தின் 23 மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
October 6, 2026, 11:29 am
மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது
October 5, 2026, 12:04 pm
தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளில் இடைத்தேர்தல்: தொகுதிகளுக்குட்பட்ட பள்ளிகளுக்கு இரு நாள்கள் விடுமுறை
October 4, 2026, 12:18 pm
தமிழ்நாட்டில் ஒரே நாளில் 500 மி.மீ. மழைப்பொழிவுக்கு வாய்ப்பு
October 3, 2026, 5:00 pm
"ஆபாசம், வன்மம், வக்கிரம்...": ஸ்டாலினைக் வன்மையாகச் சாடிய விஜய்
October 1, 2026, 5:51 pm
தாராபுரத்தில் சத்தியபாமா காதில் அமைச்சர் ராஜ் மோகன் சொன்னது என்ன?: அமைச்சர் தன்னிலை விளக்கம்
September 30, 2026, 1:33 pm
பட்டினப்பாக்கத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்: புதிய தலைமைச் செயலகம் அமைக்க கடும் எதிர்ப்பு
September 29, 2026, 10:14 pm
2 நாளில் 9 கொலைகள் - ரீல்ஸ் ஆட்சியை யாருக்காக நடத்துகிறார் முதல்வர் விஜய்?: உதயநிதி கேள்வி
September 28, 2026, 5:43 pm
