செய்திகள் தமிழ் தொடர்புகள்
பிரதமர் மோடியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு: தமிழகக் கோரிக்கைகளை முன்வைத்தார்
- புது டெல்லி
- பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் விஜய் சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழக அரசின் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமர் மோடியிடம் முதல்வர் விஜய் அளித்தார்.
தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பின்னர், முதன்முறையாக பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்காக சென்னையில் இருந்து இன்று காலை டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
இரண்டு நாள் பயணமாக டெல்லி வந்த அவரை, டெல்லி தமிழ்நாடு இல்லத்தில், தமிழக தலைமைச் செயலர் சாய் குமார் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இதையடுத்து, காவல் துறை அணிவகுப்பு மரியாதையும் விஜய்க்கு அளிக்கப்பட்டது.
இதையடுத்து, பிரதமர் மோடியுடனான சந்திப்பின்போது வலியுறுத்த வேண்டிய முக்கிய விஷயங்கள் தொடர்பாக முதல்வர் விஜய், உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதையடுத்து, அவர் பிரதமரைச் சந்திக்க புறப்பட்டுச் சென்றார்.
பிரதமர் மோடியைச் சந்தித்த முதல்வர் விஜய், அவருக்கு பூங்கொத்து கொடுத்து, சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார். புதிதாக கட்டப்பட்டுள்ள சேவா தீர்த் அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
தொடர்ந்து இருவரும் தமிழ்நாடு, தேசிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். சுமார் 20 நிமிடங்கள் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
இந்தச் சந்திப்பின்போது, மேகேதாட்டு அணை, இருமொழி கொள்கை, அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவதற்கான பிஎம்ஸ்ரீ திட்ட நிதி, தமிழகத்துக்கு நிலுவையில் உள்ள மத்திய நிதி, தமிழகத்தின் உள்கட்டமைப்பு வளர்ச்சி மேம்பாடு உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதல்வர் விஜய், பிரதமர் மோடியிடம் நேரில் வழங்கினார்.
இந்தச் சந்திப்பு நிறைவடைந்ததை அடுத்து அவர் மீண்டும் தமிழ்நாடு இல்லத்துக்கு திரும்பினார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 6, 2026, 5:41 pm
தமிழகத்தின் 23 மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
October 6, 2026, 11:29 am
மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது
October 5, 2026, 12:04 pm
தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளில் இடைத்தேர்தல்: தொகுதிகளுக்குட்பட்ட பள்ளிகளுக்கு இரு நாள்கள் விடுமுறை
October 4, 2026, 12:18 pm
தமிழ்நாட்டில் ஒரே நாளில் 500 மி.மீ. மழைப்பொழிவுக்கு வாய்ப்பு
October 3, 2026, 5:00 pm
"ஆபாசம், வன்மம், வக்கிரம்...": ஸ்டாலினைக் வன்மையாகச் சாடிய விஜய்
October 1, 2026, 5:51 pm
தாராபுரத்தில் சத்தியபாமா காதில் அமைச்சர் ராஜ் மோகன் சொன்னது என்ன?: அமைச்சர் தன்னிலை விளக்கம்
September 30, 2026, 1:33 pm
பட்டினப்பாக்கத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்: புதிய தலைமைச் செயலகம் அமைக்க கடும் எதிர்ப்பு
September 29, 2026, 10:14 pm
2 நாளில் 9 கொலைகள் - ரீல்ஸ் ஆட்சியை யாருக்காக நடத்துகிறார் முதல்வர் விஜய்?: உதயநிதி கேள்வி
September 28, 2026, 5:43 pm
