செய்திகள் தமிழ் தொடர்புகள்
தென்தமிழகத்தில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு: பங்க்குகளில் நீண்ட நேரம் காத்திருக்கும் வாகனங்கள்
காரைக்குடி:
தென் தமிழகத்தில் குறிப்பாக காரைக்குடி, திருப்புவனத்தில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு காரணமாக பெரும்பாலான பங்க்குகள் மூடப்பட்டுள்ளன.
திறந்திருக்கும் பங்க்குகளில் வாகன ஓட்டிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கிச் செல்கின்றனர்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், ரிலையன்ஸ், நயரா நிறுவனங்கள் சார்பில் 20க்கும் மேற்பட்ட பெட்ரோல் பங்க்குகள் இயக்கப்படுகின்றன.
இதில், பெரும்பாலான பங்க்குகளில் ‘ஸ்டாக் இல்லை’ என்னும் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
ஒரு சில பெட்ரோல் பங்க்குகளில் நள்ளிரவு 11 மணி வரை வாகன ஓட்டிகள் காத்திருந்து பெட்ரோல் நிரப்பிச் செல்கின்றனர். பலர் கேன்களில் பெட்ரோல் வாங்கிச் செல்கின்றனர்.
காரைக்குடியில் நேற்றும் தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில், இன்று இரண்டாவது நாளாகவும் தட்டுப்பாடு தொடர்கிறது.
இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பெட்ரோல் பங்க் உரிமையாளர் ஒருவர் கூறுகையில், ‘தினசரி எங்களுக்கு 10 முதல் 12 கலோன் பெட்ரோல் தேவைப்படும். (ஒரு கலோன்-1000 லி) ஆனால், மதுரை, திருச்சியில் இருந்து தினசரி 3 முதல் 4 கலோன் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது.
6,000 லிட்டர் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நகரில் பெரும்பாலான பங்க்குகள் காலை நேரத்தில் மட்டுமே செயல்படுகின்றன. தினசரி கிடைக்கும் 4 ஆயிரம் லிட்டர் தீர்ந்தவுடன் பங்க்குகள் மூடப்படுகின்றன.
இதேபோல, டீசலும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான எண்ணெய் நிறுவனங்கள் கேட்பதை விட குறைவாகவே அனுப்புகின்றனர். காரணம் கேட்டால் அவர்களுக்கு உற்பத்திச் செலவு அதிகமாகி தொடர்ந்து நஷ்டம் ஏற்படுவதாக கூறுகின்றனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 6, 2026, 5:41 pm
தமிழகத்தின் 23 மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
October 6, 2026, 11:29 am
மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது
October 5, 2026, 12:04 pm
தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளில் இடைத்தேர்தல்: தொகுதிகளுக்குட்பட்ட பள்ளிகளுக்கு இரு நாள்கள் விடுமுறை
October 4, 2026, 12:18 pm
தமிழ்நாட்டில் ஒரே நாளில் 500 மி.மீ. மழைப்பொழிவுக்கு வாய்ப்பு
October 3, 2026, 5:00 pm
"ஆபாசம், வன்மம், வக்கிரம்...": ஸ்டாலினைக் வன்மையாகச் சாடிய விஜய்
October 1, 2026, 5:51 pm
தாராபுரத்தில் சத்தியபாமா காதில் அமைச்சர் ராஜ் மோகன் சொன்னது என்ன?: அமைச்சர் தன்னிலை விளக்கம்
September 30, 2026, 1:33 pm
பட்டினப்பாக்கத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்: புதிய தலைமைச் செயலகம் அமைக்க கடும் எதிர்ப்பு
September 29, 2026, 10:14 pm
2 நாளில் 9 கொலைகள் - ரீல்ஸ் ஆட்சியை யாருக்காக நடத்துகிறார் முதல்வர் விஜய்?: உதயநிதி கேள்வி
September 28, 2026, 5:43 pm
