செய்திகள் தமிழ் தொடர்புகள்
பாஜகவில் நீடிப்பாரா அண்ணாமலை?
சென்னை:
தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை அக் கட்சியில் நீடிப்பாரா அல்லது விலகுவாரா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் அனலைக் கிளப்பியுள்ளது.
தனது அதிருப்தி காரணமாக டெல்லியில் முகாமிட்டுள்ள அவர், உள்துறை அமைச்சர் அமித் ஷா, கட்சித் தலைவர் நிதின் நபின், அமைப்புச் செயலாளர் பி.எல். சந்தோஷ் உள்ளிட்ட பாஜகவின் தேசியத் தலைவர்களை சந்தித்துப் பேசியுள்ளார்.
இந்த சந்திப்புக்குப் பிறகும், அவரது எதிர்கால அரசியல் நிலைப்பாடு குறித்த குழப்பம் நீடிப்பதால், தமிழக பாஜகவில் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்ற இந்த முக்கிய சந்திப்புகளில், தமிழக பாஜகவின் தற்போதைய செயல்பாடுகள், சமீபத்திய தேர்தல் முடிவுகள் குறித்து அண்ணாமலை தனது கருத்துக்களைத் விரிவாக எடுத்துரைத்ததாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, அதிமுகவுடன் பாஜக அமைத்த கூட்டணி, கட்சியின் தேர்தல் வெற்றி வாய்ப்புகளை வெகுவாகப் பாதித்ததாக அவர் தனது வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார்.
அண்ணாமலை எழுப்பிய பிரச்சினைகள் அனைத்தும் மாநிலத் தலைவர்களுடன் விரிவாக விவாதிக்கப்படும் என தேசியத் தலைமை அவருக்கு உறுதியளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் அடுத்தகட்டமாக, தற்போதைய தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலையின் புகார்கள் குறித்து விவாதிப்பதற்காக டெல்லிக்கு வரவழைக்கப்பட்டுள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 9, 2026, 6:34 am
மாணவா்களுடன் கலந்துரையாட ராகுல் காந்தி நாளை சென்னை வருகிறார்
October 6, 2026, 5:41 pm
தமிழகத்தின் 23 மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
October 6, 2026, 11:29 am
மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது
October 5, 2026, 12:04 pm
தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளில் இடைத்தேர்தல்: தொகுதிகளுக்குட்பட்ட பள்ளிகளுக்கு இரு நாள்கள் விடுமுறை
October 4, 2026, 12:18 pm
தமிழ்நாட்டில் ஒரே நாளில் 500 மி.மீ. மழைப்பொழிவுக்கு வாய்ப்பு
October 3, 2026, 5:00 pm
"ஆபாசம், வன்மம், வக்கிரம்...": ஸ்டாலினைக் வன்மையாகச் சாடிய விஜய்
October 1, 2026, 5:51 pm
தாராபுரத்தில் சத்தியபாமா காதில் அமைச்சர் ராஜ் மோகன் சொன்னது என்ன?: அமைச்சர் தன்னிலை விளக்கம்
September 30, 2026, 1:33 pm
பட்டினப்பாக்கத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்: புதிய தலைமைச் செயலகம் அமைக்க கடும் எதிர்ப்பு
September 29, 2026, 10:14 pm
