நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்கு 100 ரிங்கிட் மதிப்புள்ள புத்தகப் பற்றுச்சீட்டு விரைவில் வழங்கப்படும்: கல்வியமைச்சு

புத்ராஜெயா:

இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்கு 100 ரிங்கிட் மதிப்புள்ள புத்தகப் பற்றுச்சீட்டு விரைவில் வழங்கப்படும்.

கல்வியமைச்சு ஓர் அறிக்கையின் வாயிலாக இதனை தெரிவித்தது.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்த இந்தத் திட்டம் விரிவாக ஆராயப்பட்டு வருகிறது
இதன் மூலம் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மாணவர்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

மாணவர்களிடையே வாசிப்புக்கு முன்னுரிமை அளித்து, அதன் மூலம் மொழி மற்றும் அறிவுத் திறனை மேம்படுத்த கல்வியமைச்சு மேற்கொண்டு வரும் முயற்சிகளுடன் இந்தத் திட்டமும் ஒத்துப்போகிறது.

முன்னதாக, அனைத்துலக புத்தகக் கண்காட்சியைத் தொடங்கி வைத்தபோது, ​​கல்வி அமைச்சகத்தின் கீழ் உள்ள இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்கும், பொது உயர்கல்வி நிறுவனங்களின் மாணவர்களுக்கும் 100 ரிங்கிட் மதிப்புள்ள புத்தகப் பற்றுச்சீட்டுகள் வழங்கப்படும் என பிரதமர் அறிவித்திருந்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset