செய்திகள் மலேசியா
மிளகாய் தண்ணீர் குடிக்க கட்டாயப்படுத்தப்பட்ட குழந்தை தொடர்பாக போலிஸார் விசாரணை
குளுவாங்:
கடந்த வாரம் இந்த மாவட்டத்தில் உள்ள ஒரு குழந்தைப் பராமரிப்பு மையத்தில் (taska), ஒரு சிறுவன் மிளகாய் தண்ணீர் குடிக்க கட்டாயப்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் வைரலானதைத் தொடர்ந்து, போலிஸார் ஒரு புகாரைப் பெற்றதை உறுதிப்படுத்தினர்.
நேற்றிரவு 8.46 மணியளவில், குளுவாங் மாவட்ட போலிஸ் தலைமையகத்தில் சம்பந்தப்பட்ட குழந்தையின் பாதுகாவலரால் ஒரு புகார் பதிவு செய்யப்பட்டது என்று குளுவாங் மாவட்ட போலிஸ் உதவி ஆணையாளர் பஹ்ரின் முஹம்மத் நோ தெரிவித்தார்.
"கடந்த மே 20 ஆம் தேதி, இங்குள்ள ஒரு குழந்தைப் பராமரிப்பு மையத்தின் சமையலறையில், ஒரு ஆசிரியரால் சம்பந்தப்பட்ட குழந்தை மிளகாய் தண்ணீர் குடிக்க கட்டாயப்படுத்தப்பட்டதாக நம்பப்படுகிறது.
"விசாரணைகள் இன்னும் நடைபெற்று வருகின்றன. மேலும், 2001 ஆம் ஆண்டின் குழந்தைகள் சட்டத்தின் பிரிவு 31(1)(a) கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.
"தூண்டுதல், அவதூறு, அல்லது குடும்ப உறுப்பினர்கள், பள்ளி நிர்வாகம், அல்லது விசாரணையில் உள்ளவர்களைப் பாதிக்கக்கூடிய அறிக்கைகளைப் பரப்ப வேண்டாம் என்று பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
"அனைத்து தரப்பினருக்கும் நீதி கிடைப்பதை உறுதி செய்வதற்காக, வெளிப்படையான விசாரணையை நடத்துவதற்கு, போலிஸாருக்கு இடமளிக்குமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறோம்" என்றார் அவர்.
இதற்கு முன்னர், தாமான் ஸ்ரீ குளுவாங்கில் உள்ள ஒரு குழந்தைப் பராமரிப்பு மையம், ஒரு மாணவருக்கு உடல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்து, தண்டித்ததாகக் கூறப்படும் சமூக ஊடக பதிவுகள் வைரலாயின.
அதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட குழந்தைப் பராமரிப்பு மையத்தின் நிர்வாகம், மன்னிப்புக் கோரி, அந்தப் பிரச்சினை தொடர்பான உள் விசாரணையை நடத்துவதாக ஒரு அறிக்கையை வெளியிட்டது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
May 29, 2026, 11:03 pm
தைப்பிங் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் வைகாசி விசாக விழா: விமரிசையாக நடைபெற்றது
May 29, 2026, 7:41 pm
சிறுவர் மீதான பாலியல் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை அவசியம்: டத்தோ லோகபால மோகன்
May 29, 2026, 5:01 pm
முக்கிய சாட்சி காணாமல் போனதால் 150 கிலோ போதைப்பொருள் வழக்கில் இருவருக்கு விடுதலை
May 29, 2026, 4:36 pm
