செய்திகள் மலேசியா
மலாக்காவில் அதிர்ச்சி சம்பவம்: கடை வீட்டில் படுக்கை மெத்தையில் சுற்றப்பட்ட நிலையில் பெண் சடலம் கண்டுபிடிப்பு
மலாக்கா:
போகோக் மாங்கா, கம்போங் பாடாங் பகுதியில் உள்ள ஒரு கடை வீட்டில், கடுமையான துர்நாற்றத்தால் வெளிச்சத்துக்கு வந்த அதிர்ச்சி சம்பவம் ஒன்று பொதுமக்களை அதிரவைத்துள்ளது.
வாடகைக்கு விட முயன்ற அந்த வீட்டைச் சோதனை செய்ய வந்த உரிமையாளர், வீட்டின் உள்ளே இருந்து வீசும் கடுமையான துர்நாற்றத்தையும், சந்தேகத்திற்கிடமான ஒரு கட்டுப் பொருளையும் கண்டு உடனடியாக போலிஸுக்குத் தகவல் வழங்கியுள்ளார். பின்னர் போலிஸார் மேற்கொண்ட சோதனையில், படுக்கை மெத்தையில் சுற்றப்பட்ட நிலையில், கைகள் கட்டப்பட்ட ஒரு பெண்ணின் அழுகிய சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
சடலத்தின் அடையாளம், பாலினம் இன்னும் உறுதியாக கண்டறியப்படவில்லை என்றும், உடல் சுமார் இரண்டு வாரங்களுக்கு மேல் ஒரு மாதம் வரை இறந்திருக்கலாம் என ஆரம்பக் கணிப்பில் தெரியவந்துள்ளது என்றும் மலாக்கா மாநில போலிஸ் தலைவர் சுல்கைரி முக்தார் கூறினார்.
சம்பவ இடத்தின் நிலைமைகளை அடிப்படையாகக் கொண்டு, இது ஒரு கொலைச் சம்பவமாக இருக்கலாம் என போலிஸார் சந்தேகிக்கின்றனர். இதனடிப்படையில், 40 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் பரிசோதனையில் அவர் மெத்தாம்பெட்டமைன் (syabu) பயன்படுத்தியிருப்பது உறுதியாகியுள்ளது. மேலும், அவருக்கு ஏழு குற்றப் பதிவுகள் உள்ளதாகவும் போலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டபோது சந்தேக நபர் குழப்பமான நிலையிலும், போதைத் தாக்கத்திலும் இருந்ததாகவும் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
தற்போது, சம்பவத்தின் உண்மையான காரணம், பாதிக்கப்பட்டவரின் அடையாளம், சந்தேக நபருடன் உள்ள தொடர்பு ஆகியவை குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. சந்தேக நபர் கொலைச் சட்டத்தின் கீழ் 7 நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
May 29, 2026, 11:03 pm
தைப்பிங் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் வைகாசி விசாக விழா: விமரிசையாக நடைபெற்றது
May 29, 2026, 7:41 pm
சிறுவர் மீதான பாலியல் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை அவசியம்: டத்தோ லோகபால மோகன்
May 29, 2026, 5:01 pm
முக்கிய சாட்சி காணாமல் போனதால் 150 கிலோ போதைப்பொருள் வழக்கில் இருவருக்கு விடுதலை
May 29, 2026, 4:36 pm
புக்கிட் ஜாலில் தேசிய அரங்கின் மேம்பாட்டில் முறைகேடுகள்: MACC விசாரணை
May 29, 2026, 2:43 pm
