நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புக்கிட் ஜாலில் தேசிய அரங்கின் மேம்பாட்டில் முறைகேடுகள்: MACC விசாரணை

கோலாலம்பூர்:

புக்கிட் ஜாலில் தேசிய அரங்கத்தின் மதிப்பீட்டுச் செயல்முறை, மேம்பாட்டுப் பணிகளுடன் இணைக்கப்பட்ட புகார்களை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) இன்று மறுபரிசீலனை செய்து வருவதை உறுதிப்படுத்தியது.

மேலதிக விசாரணைக்கு முடிவெடுப்பதற்கு முன், தொடர்புடைய தகவல்கள், ஆவணங்களை அது ஆய்வு செய்து வருவதாக பெரித்தா ஹரியன் செய்தி நிறுவனம் இன்று மதியம் தெரிவித்துள்ளது.

"பொது நலன், அரசாங்க கொள்முதலைப் பாதிக்கும் ஊழல், அதிகார துஷ்பிரயோகம், தவறான நடத்தை தொடர்பான எந்தவொரு குற்றச்சாட்டையும் MACC எப்போதும் தீவிரமாகக் கருதுகிறது" என்று அது கூறியதாக மேற்கோள் காட்டப்பட்டது.

ஊழல் அல்லது முறைகேடுகள் குறித்த தகவல்களைக் கொண்டவர்கள், அவற்றைப் பொதுவில் வெளிப்படுத்துவதற்குப் பதிலாக, நேரடியாக MACC-யிடம் தெரிவிக்குமாறும் அது கேட்டுக்கொண்டது.

2027 SEA விளையாட்டுப் போட்டிகளுக்கான தயாரிப்புகளுடன் இணைக்கப்பட்ட இரண்டு ஒப்பந்தங்களை மையமாகக் கொண்டு, 24 மில்லியன் ரிங்கிட் அரங்க மேம்பாட்டுத் திட்டம் தொடர்பான ஒப்பந்ததாரர்களின் குற்றச்சாட்டுகளை உள்ளூர் ஊடகங்கள் முன்னர் செய்தி வெளியிட்டிருந்தன.

புதிய ஓடுபாதை, கச்சேரிகள், பெரிய நிகழ்வுகளின் போது பயன்படுத்தப்படும் ஒரு பாதுகாப்புத் தரை அமைப்பு ஆகியவை அந்தப் புகார்களில் அடங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset