செய்திகள் மலேசியா
முக்கிய சாட்சி காணாமல் போனதால் 150 கிலோ போதைப்பொருள் வழக்கில் இருவருக்கு விடுதலை
ஷா ஆலம்:
கிட்டத்தட்ட 150 கிலோ மெதாம்பெட்டமைன், ஹெராயின் வைத்திருந்ததாக குற்றம்சாட்டப்பட்ட இரு முன்னாள் ஸ்டீம்போட் உணவக ஊழியர்கள், இன்று உயர் நீதிமன்ற தீர்ப்பின் மூலம் விடுதலை செய்யப்பட்டனர்.
29 வயதான சான் ஷி வெய், 30 வயதான லிம் சான் ஹாவ் ஆகியோர், கோத்தா டாமன்சாரா பகுதியில் உள்ள ஒரு வீட்டுடன் தொடர்புடைய போதைப்பொருள் வழக்கில் ஆறு ஆண்டுகள் ரிமாண்டில் இருந்த நிலையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
வழக்கில் முக்கிய திருப்பமாக, தற்காப்பு தரப்பு கோரிய முக்கிய சாட்சியைக் குற்றப்பிரிவு தரப்பு முறையாகக் கொண்டு வரத் தவறியது வழக்கையே பாதித்ததாக நீதிபதி டத்தோ பூபிந்தர் சிங் தெரிவித்தார். இந்த தவறு தற்காப்பு தரப்பை பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், குறுக்கு விசாரணையில் குற்றப்பிரிவு தரப்பு முக்கிய அம்சங்களை வலுவாக எதிர்க்கத் தவறியதுடன், இரு நபர்களும் போதைப்பொருளுக்கு நேரடி கட்டுப்பாடு வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டிலும் சந்தேகம் நிலவுவதாக நீதிமன்றம் கண்டறிந்தது.
முன்னதாக, 2020 அக்டோபர் 5ஆம் தேதி நடந்த சோதனையில், 51.5 கிலோ மெதாம்பெட்டமைன், 98.25 கிலோ ஹெராயின் கண்டுபிடிக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் விசாரணையில், இருவரும் அந்த வீட்டின் வாடகையாளர்கள் அல்ல என்றும், ஒருவரை வரவேற்பு அறையிலும் மற்றொருவரை காவல் நிலையம் அருகிலும் கைது செய்ததாகவும் கூறப்பட்டது.
சான்றுகள் போதிய வலிமையுடன் நிரூபிக்கப்படாததாலும், முக்கிய சாட்சி காணாமல் போனதாலும் வழக்கு சந்தேக நிழலில் முடிந்து, இருவருக்கும் விடுதலை கிடைத்துள்ளது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
May 29, 2026, 11:03 pm
தைப்பிங் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் வைகாசி விசாக விழா: விமரிசையாக நடைபெற்றது
May 29, 2026, 7:41 pm
சிறுவர் மீதான பாலியல் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை அவசியம்: டத்தோ லோகபால மோகன்
May 29, 2026, 4:36 pm
புக்கிட் ஜாலில் தேசிய அரங்கின் மேம்பாட்டில் முறைகேடுகள்: MACC விசாரணை
May 29, 2026, 2:43 pm
