நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மெத்தையில் சுற்றப்பட்ட நிலையில் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட கடை வீட்டிற்குள் இரண்டு கவர்ச்சியான பெண்கள் நுழைவதை ஆடவர் பார்த்துள்ளார்

மலாக்கா:

மெத்தையில் சுற்றப்பட்ட நிலையில் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட கடை வீட்டிற்குள் இரண்டு கவர்ச்சியான பெண்கள் நுழைவதை ஆடவர் ஒருவர் பார்த்துள்ளனர்.

நேற்று போகோக் மங்காவின் கம்போங் பாடாங்கில் உள்ள கடை வீட்டில் மெத்தையில் சுற்றப்பட்ட நிலையில் அழுகிய சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.

சம்பந்தப்பட்ட வீட்டிற்குள் கவர்ச்சியாக உடையணிந்த இரண்டு பெண்கள் உட்பட மூன்று நபர்கள் ஒரு வாகனத்தில் பயணித்ததை அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் பார்த்துள்ளார்.

தன்னை இக்வான் என்று அடையாளப்படுத்த விரும்பிய அந்த நபர், மாலை 4 மணியளவில் அந்தக் கடை வீட்டு வரிசையின் தரைத்தளத்தில் உள்ள ஒரு கடையில் பொருட்கள் வாங்கிக்கொண்டிருந்தபோது அந்த மூன்று நபர்களையும் சந்தித்ததாகக் கூறினார்.

20 வயதுகளில் உள்ள இரண்டு பெண்கள் கவர்ச்சியாக உடையணிந்து முகக்கவசம் அணிந்திருந்த நிலையில், கடை வீட்டின் மேல் தளத்திற்குச் சென்று, சிறிது நேரத்திலேயே அவசரமாகக் கீழே இறங்கியதை நான் பார்த்தேன்.

பின்னர் அவர்கள், முகக்கவசம் அணிந்திருந்த ஒரு நபர் ஓட்டி வந்த வாகனத்தில் ஏறிச் சென்றனர் என்று இன்று சம்பவ இடத்தில் அவரைச் சந்தித்தபோது அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்





தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset