செய்திகள் தமிழ் தொடர்புகள்
சாகித்ய அகாதெமி விருதுபெற்ற எழுத்தாளரும் கவிஞருமான புவியரசு காலமானார்
கோவை:
சாகித்ய அகாதெமி விருதுபெற்ற எழுத்தாளரும் கவிஞருமான புவியரசு கோவையில் இன்று (ஜூன் 30) காலமானார். அவருக்கு வயது 96.
வானம்பாடி இயக்கத்தை உருவாக்கிய இவர், 2009ஆம் ஆண்டு மொழிபெயர்ப்பு நூலுக்கான சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.
2009ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருது எழுத்தாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளரான புவியரசுக்கு வழங்கப்பட்டது.. அவர் எழுதியுள்ள 'கையொப்பம்' என்ற கவிதை நூலுக்கு சாகித்ய அகாதெமி விருது கிடைத்தது.
புவியரசு, நஜ்ருல் இஸ்லாம் எழுதிய கவிதையை மொழிபெயர்த்ததற்காக முன்னர் அந்தப் பிரிவில் விருது பெற்றவர் என்பது குறிப்பிடத் தக்கது.
கோவையைச் சேர்ந்த புவியரசு, தமிழாசிரியராக முப்பது ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றியவர். 80 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். ஷேக்ஸ்பியரின் படைப்புகள் பலவற்றை மொழிபெயர்த்துள்ளார்.
இவரது மனிதன் என்ற நாடகம் 19 மொழிகளில் மொழிகளில் அனைத்து வானொலி நிலையங்களிலும் ஒலிபரப்பாகியுள்ளது. 79 வயதான இவர் தஸ்தாவஸ்கியின் 1200 பக்க நாவலான கரமசோவ் சகோதரர்களைத் தமிழில் தந்துள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 4:12 pm
ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசம்: சட்டப் பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு
August 22, 2026, 4:35 pm
திமுகவில் மாற்றங்களை செய்த ஸ்டாலின்: 9 அதிரடி தீர்மானங்கள் நிறைவேற்றம்
August 21, 2026, 9:23 pm
“கார் வாங்குவதில் காட்டும் வேகத்தை குறுவை தொகுப்பில் காட்டாதது ஏன்?”: உதயநிதி கேள்வி
August 20, 2026, 11:53 am
பிரதமர் மோடி அமைச்சரவையில் 20 பேர் இலாகா விரைவில் மாற்றம்: புதிதாக திமுகவும் இடம்பெற இருப்பதாக தகவல்
August 18, 2026, 1:05 pm
சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு
August 17, 2026, 6:34 pm
