செய்திகள் தமிழ் தொடர்புகள்
பெரம்பூர் தொகுதியில் மக்கள் புகார் அளிக்க விரைவில் முதல்வர் விஜய்யின் பிரத்யேக செயலி அறிமுகம்
சென்னை:
முதல்வர் விஜய் வெற்றி பெற்ற பெரம்பூர் தொகுதியில் பொதுமக்கள் புகார் அளிக்க பிரத்யேக செயலி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திருச்சி கிழக்கு, பெரம்பூர் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல்வர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.
மக்கள் சேவை தளம்
இந்நிலையில், பெரம்பூர் தொகுதி மக்கள் தங்களது குறைகளையும் புகார்களையும் தொகுதி எம்எல்ஏ-வான முதல்வரிடம் நேரடியாகத் தெரிவிக்கும் வகையில் ‘மக்கள் சேவை தளம்’ என்ற பிரத்யேக செல்போன் செயலியை முதல்வர் விஜய் அறிமுகம் செய்ய உள்ளார்.
இந்தச் செயலி மூலம் பெரம்பூர் தொகுதி மக்கள் தங்களின் அடிப்படைத் தேவைகளான, மின்சாரம், சாலை வசதி, குடிநீர், துப்புரவுப்பணி, கல்வி மற்றும் மருத்துவ உதவிகள், அரசு நலத்திட்டங்கள், வீட்டு வசதி உதவி, வேலைவாய்ப்பு, வணிகம் மற்றும் சட்டரீதியிலான ஆவண உதவிகள், அவசர உதவிகள் உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகள் குறித்தும் நேரடியாக முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு செல்ல முடியும்.
பொதுமக்கள் இந்தச் செயலி மூலம் புகாரைப்பதிவு செய்த அடுத்த சில நொடிகளிலேயே, அது பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தை சென்றடையும். புகார் சமர்ப்பிக்கப்பட்டவுடன், அதற்கான ‘டிக்கெட் எண்’ புகார்தாரரின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்.
ஒவ்வொரு புகாரும் முன்னுரிமை அடிப்படையிலும், தீர்க்கப்பட வேண்டிய காலக்கெடுவோடும் கண்காணிக்கப்படும். பொதுமக்கள் தங்களின் டிக்கெட் எண்ணை செயலியில் உள்ளீடு செய்து, புகாரின் தற்போதைய நிலையை ஆரம்பம் முதல் தீர்வு வரை நேரடியாகக் கண்காணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 4:12 pm
ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசம்: சட்டப் பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு
August 22, 2026, 4:35 pm
திமுகவில் மாற்றங்களை செய்த ஸ்டாலின்: 9 அதிரடி தீர்மானங்கள் நிறைவேற்றம்
August 21, 2026, 9:23 pm
“கார் வாங்குவதில் காட்டும் வேகத்தை குறுவை தொகுப்பில் காட்டாதது ஏன்?”: உதயநிதி கேள்வி
August 20, 2026, 11:53 am
பிரதமர் மோடி அமைச்சரவையில் 20 பேர் இலாகா விரைவில் மாற்றம்: புதிதாக திமுகவும் இடம்பெற இருப்பதாக தகவல்
August 18, 2026, 1:05 pm
சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு
August 17, 2026, 6:34 pm
