செய்திகள் தமிழ் தொடர்புகள்
யானைகள் சண்டையில் சிக்கி சென்னை பெண் உயிரிழப்பு
சென்னை:
கர்நாடக மாநிலம் குடகில் காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த யானைகளுக்கு இடையே ஏற்பட்ட சண்டையில் சிக்கி சென்னையை சேர்ந்த சுற்றுலா பயணி ஜாய்சி உடல் நசுங்கி உயிரிழந்தார். கணவரின் கண் முன்னால் நிகழ்ந்த இந்த சம்பவத்தின் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
சென்னை பல்லாவரத்தை சேர்ந்த ஜாய்சி (33), தனது கணவர் மற்றும் குழந்தையுடன் கர்நாடக மாநிலம் குடகிற்கு சுற்றுலா சென்றார். இங்கு நேற்று பிற்பகல் 2 மணியளவில் மடிகேரியை அடுத்துள்ள துபாரே யானைகள் முகாமுக்கு சென்றனர். அங்கு 10 க்கும் மேற்பட்ட யானைகள் காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தன.
அப்போது மார்த்தாண்டா, கஞ்சன் ஆகிய இரு யானைகள் ஒன்றையொன்று தாக்கின. இந்த யானைகளுக்கு இடையே சிக்கிய ஜாய்சி கீழே விழுந்தார். அருகிலிருந்த அவரது கணவர் கையில் குழந்தையை வைத்துக்கொண்டு, மனைவியை மீட்க தீவிர முயற்சி செய்தார். ஆனாலும் அவரை மீட்க முடியவில்லை. யானைகள் சண்டையில் படுகாயமடைந்த ஜாய்சி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
கையில் குழந்தையுடன் மனைவியை யானைகளிடம் இருந்து மீட்க போராடிய கணவரின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 4:12 pm
ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசம்: சட்டப் பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு
August 22, 2026, 4:35 pm
திமுகவில் மாற்றங்களை செய்த ஸ்டாலின்: 9 அதிரடி தீர்மானங்கள் நிறைவேற்றம்
August 21, 2026, 9:23 pm
“கார் வாங்குவதில் காட்டும் வேகத்தை குறுவை தொகுப்பில் காட்டாதது ஏன்?”: உதயநிதி கேள்வி
August 20, 2026, 11:53 am
பிரதமர் மோடி அமைச்சரவையில் 20 பேர் இலாகா விரைவில் மாற்றம்: புதிதாக திமுகவும் இடம்பெற இருப்பதாக தகவல்
August 18, 2026, 1:05 pm
சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு
August 17, 2026, 6:34 pm
